ஐபிஎல் வரலாற்றில் விரும்பத்தகாத லிஸ்ட்டில் தோனி, கம்பீர்..! தவானுக்குத்தான் பெரிய அசிங்கம்

First Published 17, Sep 2020, 6:18 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாது, ஐபிஎல் அணிகளுமே ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் அடித்தும், ஒரு சதம் கூட அடிக்காத டாப் 5 வீரர்களை பார்ப்போம்.

5. தினேஷ் கார்த்திக் (18 அரைசதங்கள்)

ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(நடப்பு அணி) ஆகிய அணிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை 182 போட்டிகளில் ஆடி 27.08 என்ற சராசரியுடன் 3,656 ரன்களை குவித்துள்ளார்.

இதுவரை ஐபிஎல்லில் 18 அரைசதங்களை அடித்துள்ள தினேஷ் கார்த்திக், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதால் அவரால் பெரிய இன்னிங்ஸை ஆடமுடியாததால், சதம் அடிக்க முடியவில்லை. எனினும் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக்கால் சதத்தை எட்ட முடியாமல் போனது.

4. தோனி (23 அரைசதங்கள்)

ஐபிஎல்லில் 3 முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டனும் பெஸ்ட் ஃபினிஷருமான தோனி இதுவரை 23 அரைசதங்களை விளாசியும் அதில் ஒன்றைக்கூட அவரால் சதமாக மாற்றமுடியவில்லை. அதற்கு காரணம், அவரும் பின்வரிசையில் இறங்குவதுதான். ஐபிஎல்லில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84.

3. ராபின் உத்தப்பா (24 அரைசதங்கள்)

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆடிவரும் ராபின் உத்தப்பா, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், ஆர்சிபி, கேகேஆர் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடவுள்ளார். ஐபிஎல்லில் 24 அரைசதங்கள் அடித்துள்ள உத்தப்பா, அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றியதில்லை. இவர் தினேஷ் கார்த்திக், தோனியை போன்றல்ல; இவர் டாப் ஆர்டரிலும் ஆடியிருக்கிறார். ஆனாலும் சதம் அடித்ததில்லை.

2. கவுதம் கம்பீர் (36 அரைசதங்கள்)

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்கள் மற்றும் வீரர்களில் ஒருவர் கவுதம் கம்பீர். கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கம்பீர், 154 போட்டிகளில் 31.01 என்ற சராசரியுடன் 4217 ரன்களை குவித்துள்ளார். தொடக்க வீரராக இருந்தும் கூட, கம்பீர் அவர் அடித்த 36 அரைசதங்களில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை.

1. ஷிகர் தவான் (37 அரைசதங்கள்)

ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் அடித்து அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றாத வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான் இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தொடக்க வீரர். ஷிகர் தவான், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார்.

ஐபிஎல்லில் இதுவரை 37 அரைசதங்களை அடித்துள்ள ஷிகர் தவான், தொடக்க வீரராக இருந்தும் கூட, அவர் அதில் ஒரு அரைசதத்தைக்கூட சதமாக மாற்றவில்லை. ஷிகர் தவான், அதிகபட்சமாக 97 ரன்களை குவித்துள்ளார். அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆனாலும் அந்த இன்னிங்ஸில் அவரால் சதமடிக்க முடியாமல் போனது.

loader