- Home
- Sports
- Sports Cricket
- ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு – பீல்டராக விராட் கோலி படைத்த சாதனையின் சுவாரஸ்யம்!
ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு – பீல்டராக விராட் கோலி படைத்த சாதனையின் சுவாரஸ்யம்!
Top 5 Players Getting Most Catches as a Fielder in ODIs : ஆஸி அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய நட்சத்திர கிரிக்கெட்டர் விராட் கோலி ஆஸி அணிக்கு எதிராகவே ஒரு பீல்டராக சுவாரஸ்யமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

Top 5 Players Getting Most Catches as a Fielder in ODIs : இந்திய அணியின் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார். துபாயில் இன்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி (Most catches as a fielder in ODIs) இந்த சாதனையை நிகழ்த்தினார்.
Virat Kohli Breaks Ricky Ponting Records by Most catches as a fielder
36 வயதான விராட் கோலி, ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தபோது இரண்டு கேட்சுகளைப் பிடித்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். விராட் கோலி 301 (இன்றைய போட்டி உள்பட) போட்டிகளில் 161 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இலங்கையின் மஹேல ஜெயவர்தனே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
Virat Kohli 161 Catches
ரிக்கி பாண்டிங் 160 கேட்சுகளுடன் 3ஆவது இடத்திலும், முகமது அசாருதீன் 156 கேட்சுகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர். ஆஸி வீரர் ஜோஷ் இங்லிஸ் அடித்த பந்தை விராட் கோலி பிடித்ததன் மூலம் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார். 48ஆவது ஓவரின் கடைசி பந்தில் நாதன் எல்லீஸ் கேட்ச் பிடித்ததன் மூலமாக கோலி கோலி (Most catches as a fielder in ODIs) இந்த சாதனையை முறியடித்தார். நாதன் எல்லிஸ் அடித்த பந்தை விராட் கோலி வலது பக்கம் நகர்ந்து பிடித்தார்.
Virat Kohli 161 Catches
மிக முக்கியமான முதல் அரையிறுதிப் போட்டியில் முதவில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸி அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (73) மற்றும் அலெக்ஸ் கேரி (61) ஆகியோரின் அரைசதங்களால் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்தது. முகமது ஷமி ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித்தின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் கேரியை ரன் அவுட் செய்தார்.
Top 5 Players Getting Most catches as a fielder in ODIs
இந்திய அணியில் ஷமி 3/48 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி (2/49) மற்றும் ரவீந்திர ஜடேஜா (2/40) ஆகியோரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இன்றைய போட்டியின் சிறப்பம்சம்:
முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்தார்.
வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் உள்பட 40 ரன்கள் கொடுத்தார்.
அக்ஷர் படேல் ஒரு விக்கெட் எடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் உள்பட 43 ரன்கள் கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா 5.3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்தார். 40 ரன்கள் கொடுத்தார்.
India vs Australia
திருப்பு முனையை ஏற்படுத்திய பந்து வீச்சாளர்:
வருண் சக்கரவர்த்தி – டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா – மார்னஷ் லபுஷேன் விக்கெட்டை எடுத்தார்.
முகமது ஷமி – ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றினார்.
அக்ஷர் படேல் – கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார்.
அலெக்ஸ் கேரியின் ரன் அவுட்:
அலெக்ஸ் கேரியின் ரன் அவுட் தான் இன்றைய போட்டியில் முக்கியமாக திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஷ்ரேயாஸ் ஐயர் தான் அவரை ரன் அவுட் செய்தார்.
சிறப்பான கேட்ச்:
டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் அபாரமாக பிடித்தார்.