- Home
- Sports
- Sports Cricket
- T20 World Cup 2026 : இந்த 5 வீரர்கள் தான் உலகக் கோப்பை முடிவை தீர்மானிப்பார்கள்
T20 World Cup 2026 : இந்த 5 வீரர்கள் தான் உலகக் கோப்பை முடிவை தீர்மானிப்பார்கள்
T20 உலகக் கோப்பை 2026-ல் கோப்பையை தீர்மானிக்கப்போகும் 5 முக்கிய வீரர்கள் யார்? டீம் இந்தியா கவனிக்க வேண்டிய 3 சவால் வீரர்கள் பற்றிய முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

அபிஷேக் சர்மா (இந்தியா)
டி20 பேட்டிங்கிற்கு மிகவும் பொருத்தமான தொடக்க வீரர் அபிஷேக் சர்மா. முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டுவது இவரது பாணி. சர்வதேச டி20-ல் 194.74 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,297 ரன்கள் எடுத்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
தற்கால கிரிக்கெட்டின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. 87 டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகள். 6.54 எகானமி. பவர் பிளே, டெத் ஓவர்களில் எதிரணியை திணறடிக்கும் இவர் இந்தியாவின் துருப்புச்சீட்டு.
வனிந்து ஹசரங்கா (இலங்கை)
சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில், இலங்கை அணியின் வெற்றியை தீர்மானிப்பவர் வனிந்து ஹசரங்கா. 94 டி20 போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்துகள் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும்.
டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)
முக்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடுவதே டிராவிஸ் ஹெட்டின் தனித்துவம். ஆஸ்திரேலியாவிற்கு அதிரடி தொடக்கம் தருபவர். 49 டி20-களில் 156 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,224 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்.
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
சர்வதேச டி20-யின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 111 போட்டிகளில் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங், ஃபீல்டிங்கிலும் ஆப்கானிஸ்தான் அணியின் எக்ஸ்-ஃபாக்டராக திகழ்கிறார்.

