- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பை IND vs USA.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. சிக்சர் மன்னனுக்கு இடம்.. இந்தியா பிளேயிங் லெவன்!
டி20 உலகக்கோப்பை IND vs USA.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. சிக்சர் மன்னனுக்கு இடம்.. இந்தியா பிளேயிங் லெவன்!
T20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

T20 உலகக்கோப்பை 2026
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா பிப்ரவரி 7ம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்திய அணி அன்றைய தினமே தனது தொடக்க ஆட்டத்தில் USA எனப்படும் அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 7ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
சஞ்சு சாம்சன் நீக்கம்
T20 உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்பதே இப்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு 100 சதவீதம் இடம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிகவும் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் கூட 25 ரன்களை தாண்டவில்லை.
வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சன்
கொஞ்சம் கூட தன்னம்பிக்கையின்றி ஆடிய அவர் அவுட் ஆன விதமும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் சஞ்சு சாம்சன் சொதப்பினார்.
இதனால் அவர் நீக்கப்பட்டு அவர் இடத்தில் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இடம்பெறுவதும் 100 சதவீதம் உறுதியாகி விட்டது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய இந்திய அணி அப்படியே அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் என எதிர்பார்ப்படுகிறது.
சிக்சர் மன்னன் திலக் வர்மே உள்ளே
அந்த போட்டியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என ஒருவரும் விளையாடிய நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக டி20 சிக்சர் மன்னன் திலக் வர்மா உள்ளே வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்த திலக் வர்மா அமெரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ததால் எந்த ஒரு சிரமுமின்றி நேரடியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளார்.
கிஷான் கிஷன், அபிஷேக் சர்மா ஓப்பனிங்
சஞ்சு சாம்சன் வெளியேறுவதால் அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. திலக் வர்மா ஒன் டவுனில் களமிறங்குவார். மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது.
பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்யா, தேவைப்பட்டால் ஷிவம் துபே உள்ளனர். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, ஆல்ரவுண்டர் அக்சர் படேல் உள்ளனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

