அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி யாரும் படைக்காத சாதனையை படைக்க ரோகித்துக்கு கிடைத்த வாய்ப்பு
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி 8 முறை சுற்றுப்பயணம் செய்து ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், ரோகித் சர்மாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
SA vs IND First Test
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் நடக்கிறது.
Rohit Sharma
அசாரூதீன், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி இதுவரையில் தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை. இவர்கள் யாரும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Centurion Test
ஏற்கனவே டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், டெஸ்ட் தொடருக்கு மட்டுமே தற்போது ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.
South Africa vs India Test
கடந்த 1992ல் – முகமது அசாருதீன்
1996ல் – சச்சின் டெண்டுல்கர்
2001ல் – சவுரங் கங்குலி
2006- 07ல் – ராகுல் டிராவிட்
2010 – 11 மற்றும் 2013 – 14ல் – எம்.எஸ்.தோனி
2018 – 19 மற்றும் 2021 – 22ல் – விராட் கோலி ஆகியோரது தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க்காவில் சுற்றுப்பயணம் செய்தது. இதில், ஒரு முறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை.
Rohit Sharma
இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த கேப்டன்களின் வரிசையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
SA vs IND Test Series
ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய ரோகித் சர்மா, இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.