IND vs SL: தம்பி நீ பண்ண வரைக்கும் போதும்.. கொஞ்சம் உட்காரு..! 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். அந்த போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை(ஜனவரி 7) ராஜ்கோடில் நடக்கிறது. அந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 2வது டி20 போட்டியில் ஹாட்ரிக் நோ பால் உட்பட மொத்தம் 5 நோ பால்களை வீசி ஆட்டத்தின் முடிவு இந்தியாவிற்கு பாதகமாக அமைய முக்கிய காரணங்களில் ஒருவராக அமைந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!
2வது டி20 போட்டியில் 2 ஓவர் மட்டுமே வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங் மனதளவில் தேறிவருவதற்காக கடைசி டி20 போட்டியில் பிரேக் கொடுக்கப்படலாம்.
சின்ன பசங்க தானே.. அவசரப்படக்கூடாது.. போகப்போக சரி ஆகிடுவாங்க..! இளம் வீரர்கள் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை
உத்தேச இந்திய அணி:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.