MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சின்ன பசங்க தானே.. அவசரப்படக்கூடாது.. போகப்போக சரி ஆகிடுவாங்க..! இளம் வீரர்கள் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை

சின்ன பசங்க தானே.. அவசரப்படக்கூடாது.. போகப்போக சரி ஆகிடுவாங்க..! இளம் வீரர்கள் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 நோ-பால்கள் வீசி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அர்ஷ்தீப் சிங்கை விமர்சிக்காமல் அவர்மீது பொறுமை காக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 06 2023, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,நேற்று புனேவில் நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் - பதும் நிசாங்கா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 80 ரன்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிசாங்கா 33 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ் 31 பந்தில் 52 ரன்கள் அடித்தார். சாரித் அசலங்கா 39 ரன்கள் அடித்தார். இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். 22 பந்தில் ஷனாகா 56 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது இலங்கை அணி.

ரோஹித், கோலியின் சர்வதேச டி20 கெரியர் ஓவர்..! மௌனம் கலைத்தார் ராகுல் டிராவிட்
 

35

207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 57 ரன்களுக்கே இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் சூர்யகுமாரும் அக்ஸர் படேலும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 6வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 90 ரன்களை குவித்தனர். 51 ரன்னில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, 31 பந்தில் 65 ரன்களை குவித்து கடைசி வரை போராடிய அக்ஸர் படேல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 190 ரன்கள் அடித்த இந்திய அணி, கடுமையாக போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 

45

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய 5 நோ-பால்கள் தான் இரு அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக 3 நோ பால்களை வீசி, டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 2வது ஓவரின் கடைசி பந்தை வீச 3 நோ பால் வீசி அந்த ஒரு பந்தில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன்பின்னர் அவருக்கு பவுலிங் கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா, 19வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் 2 நோ பால்களை வீசி, 2 ஓவரில் 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கினார் அர்ஷ்தீப். இந்த இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமாக 7 நோ பால்களை வழங்கியது. இந்திய அணி 16 ரன் வித்தியாசத்தில் தான் தோற்றது. அர்ஷ்தீப் அந்த 5 நோ பால்கள் வீசவில்லை என்றால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.

2023 ஆசிய கோப்பை: ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான்..! 2023 - 2024ம் ஆண்டுக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

55

அதனால் 5 நோ பால்களை வீசிய அர்ஷ்தீப் சிங் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அர்ஷ்தீப் குறித்து பேசிய ராகுல் டிராவிட்,  இளம் வீரர்கள் மீது பொறுமை காக்க வேண்டும். இந்திய அணியில் இளம் வீரர்கள் நிறைய பேர் ஆடுகின்றனர். குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் அனுபவமற்ற வீரர்கள். இதுமாதிரியான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் மீது அவசரப்படாமல், பொறுமை காக்க வேண்டும். இதுமாதிரி சில ஆட்டங்கள் அமையத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அவர்கள் போகப்போக கற்றுக்கொண்டு தேறிவிடுவார்கள் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்தார்.
 

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image2
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image3
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved