ரோஹித், கோலியின் சர்வதேச டி20 கெரியர் ஓவர்..! மௌனம் கலைத்தார் ராகுல் டிராவிட்
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களின் சர்வதேச டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.
2021 டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என கடந்த 2 ஆண்டுகளில் 3 ஐசிசி தொடர்களில் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது.
சரியான அணி தேர்வின்மை, பவர்ப்ளேயில் இந்திய அணி ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளாதது, ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாதது ஆகியவைதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன.
எனவே சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய அதிரடி இளம் வீரர்களை அணியில் எடுத்து, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் வலுவான அணியை கட்டமைத்து, ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாள வேண்டும். 2024 டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே வலுவான அணியை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்தன.
அதேபோலவே டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில் கூட இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தான் டாப் ஆர்டரில் இறங்கினர். சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் ஆட வாய்ப்பு பெறுகின்றனர்.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்ற பின், அந்த போட்டியில் ஆடியதில் 3-4 வீரர்கள் மட்டும்தான் இப்போது டி20 அணியில் ஆடிவருகின்றனர். இளம் வீரர்களை கொண்ட எதிர்காலத்திற்கான டி20 அணியை கட்டமைக்கிறோம். இந்த இலங்கை தொடர் சிறப்பான அனுபவம். இப்போதைக்கு ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தான் கவனம் செலுத்துகிறோம். அதனால் டி20 அணியில் இளம் வீரர்களை பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் டிராவிட்.