- Home
- Sports
- Sports Cricket
- WI vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்.. 3 வீரர்கள் அறிமுகம்
WI vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்.. 3 வீரர்கள் அறிமுகம்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடரும், அதைத்தொடர்ந்து டி20 தொடரும் நடக்கின்றன.
ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, சீனியர் வீரர்களான கோலி, பும்ரா, ஷமி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே ஷிகர் தவான் கேப்டன்சியில் இந்திய அணி ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
டிரினிடாட்டில் இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
கேப்டன் ஷிகர் தவானுடன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறக்கப்படலாம். இடது - வலது காம்பினேஷனை கருத்தில்கொண்டும், ருதுராஜ் கெய்க்வாட் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடி சதங்களை குவித்திருக்கிறார் என்பதாலும், அவருக்கு ஓபனிங் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 - 4ம் வரிசைகளில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும், விக்கெட் கீப்பராக சாம்சன் - இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவரும், ஃபினிஷராக தீபக் ஹூடாவும் ஆடுவார்கள்.
ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடலாம்.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்/இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.