சஞ்சு சாம்சனுக்கு பதில் களமிறங்குவது யார்..? நீண்ட நாள் காத்திருக்கும் வீரருக்கு சான்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டி20 போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்குகின்றன.
Sanju Samson ruled out:இலங்கை டி20 தொடர்: சஞ்சு சாம்சன் விலகல்: பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் சேர்ப்பு
இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். காயம் காரணமாக சஞ்சு சாம்சன் இந்த தொடரிலிருந்து விலையுள்ளார். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜித்தேஷ் ஷர்மா அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறமாட்டார். ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்ததன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல் திரிபாதி ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருந்துவந்த நிலையில், இன்றைய போட்டியில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது.
மற்றுமொரு மாற்றமும் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. முதல் டி20 போட்டியில் 4 ஓவரில் 41 ரன்களை வாரி வழங்கிய ஹர்ஷல் படேலுக்கு பதிலாக இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
உத்தேச இந்திய அணி:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.