SL vs NZ Test Series: 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் தொடர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த இலங்கை, டி20 தொடரை 1-2 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தியா தொடருக்குப் பிறகு இலங்கை அணி எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலிம், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடுகிறது.
இலங்கை டெஸ்ட்
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரையில் கிறிஸ்சர்ஜ்ஜில் நடக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி 17 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரையில் வெல்லிங்டனில் நடக்கிறது.
இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்
நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் மூலமாக நிஷான் மதுஷ்கா மற்றும் மிலான் ரத்னயாகே ஆகியோர் இலங்கை அணியில் அறிமுகமாகின்றனர்.
நியூசிலாந்து இலங்கை டெஸ்ட்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும், இலங்கை 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2ல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை
எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று, இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும். ஆஸ்திரேலியா வெளியேறும். இந்தியா ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
17 பேர் கொண்ட இலங்கை அணி
திமுத் கருணாரத்னே (கேப்டன்), ஒசாடா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, தினேஷ் சண்டிமால், கமிண்டு மெண்டிஸ், நிரோஷன் டிக்வெலா, நிஷான் மதுஷ்கா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெய்சூர்யா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லகிரு குமரா, அசிதா பெர்னாண்டோ, விஸ்வா பெர்னாண்டோ, மிலான் ரத்னயாகே,