SA vs IND 1st Test:என்னா ஒரு சிரிப்பு: தென் ஆப்பிரிக்கா சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த மகிழ்ச்சியில் சுப்மன் கில்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியினர் அங்கு சுற்றுலா சென்ற போது இந்திய அணியின் சுப்மன் கில் சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
Team India SA Tour
இதில், முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது.
Shubman Gill SA Tour
இதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியானது 2-1 என்று தொடரை கைப்பற்றியது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
Shubman Gill
இந்த போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். இதில், சுப்மன் கில் சிங்கத்துடன் செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிங்கம், வரிக்குதிரை ஆகிய விலங்குகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.