MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Shubman Gill: பாகிஸ்தான் சாதனையை தகர்த்த 'பிரின்ஸ்' சுப்மன் கில்! ஆப்கானை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!

Shubman Gill: பாகிஸ்தான் சாதனையை தகர்த்த 'பிரின்ஸ்' சுப்மன் கில்! ஆப்கானை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!

Shubman Gill: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரை சதம் விளாசிய சுப்மன் கில் ஓடிஐயில் புதிய சாதனை படைத்தார்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 13 2026, 10:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணி எளிதில் வெற்றி
Image Credit : Getty

இந்திய அணி எளிதில் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக 25 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ரஹ்மானுல்லா குர்பாஸின் சதத்திற்கு பதிலடியாக இந்திய கேப்டன் சுப்மன் கில் (84) மற்றும் கே.எல். ராகுலின் (39) அதிரடி ஆட்டத்தால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குர்பாஸ் அதிரடி சதம்
Image Credit : Getty

குர்பாஸ் அதிரடி சதம்

ரஹ்மானுல்லா குர்பாஸ் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து மிரட்டினார். மொத்தம் எட்டு சிக்ஸர்களும், எட்டு பவுண்டரிகளும் விளாசினார். குர்பாஸைத் தவிர, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (27), அஸ்மத்துல்லா உமர்சாய் (26) ஆகியோர் மட்டுமே இரட்டை லக்க ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிதிஷ் குமார் ரெட்டிக்கு இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன.

சுப்மன் கில் அசத்தல்

பின்பு இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. கேப்டன் சுப்மன் கில்லுடன் 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா (16), ஆறாவது ஓவரில் ரன் அவுட் ஆனார். அதன்பிறகு, கில் - இஷான் கிஷன் (22 பந்துகளில் 34) ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை ரஷித் கான் பிரித்தார். 13-வது ஓவரில் கிஷனை அவர் போல்டாக்கினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரால் (12) பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்தியா 142 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

34
கே.எல்.ராகுல் அதிரடி
Image Credit : Getty

கே.எல்.ராகுல் அதிரடி

ஆனால், கே.எல். ராகுலின் (19 பந்துகளில் 39) அதிரடி ஆட்டம் இந்தியாவை எளிதான வெற்றிக்கு அழைத்துச் சென்றது. கில்லுடன் சேர்ந்து ராகுல் 53 ரன்கள் சேர்த்தார். அவரது ஆட்டத்தில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும். கில் இரண்டு சிக்ஸர்களையும் 11 பவுண்டரிகளையும் அடித்தார். அவர் 66 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

44
சுப்மன் கில் புதிய சாதனை
Image Credit : AFP

சுப்மன் கில் புதிய சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய சுப்மன் கில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 62 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களைக் கடந்ததன் மூலம், இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் ஃபகர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை கில் முந்தியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!
Recommended image2
'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?
Recommended image3
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Related Stories
Recommended image1
Rahmanullah Gurbaz: மின்னல் வேக சதம்.. டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்த குர்பாஸ்.. மாஸ் பேட்டிங்!
Recommended image2
Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved