IND vs AUS: 2வது டெஸ்ட்டிலிருந்து ஜெய்தேவ் உனாத்கத்தை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர், 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எப்படியும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கப்போவதில்லை. எனவே ரஞ்சி டிராபி ஃபைனலிலாவது அவர் சார்ந்த சௌராஷ்டிரா அணிக்காக அவர் ஆடட்டும் என்பதற்காக இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
கடந்த ரஞ்சி டிராபி சீசனில் ஜெய்தேவ் உனாத்கத் தலைமையிலான சௌராஷ்டிரா அணி தான் கோப்பையை ஜெயித்தது. இந்த சீசனிலும் ஃபைனலுக்கு சௌராஷ்டிரா அணி முன்னேறியுள்ளது. வரும் 16ம் தேதி தொடங்கும் ஃபைனலில் சௌராஷ்டிரா - பெங்கால் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. அந்த போட்டியில் ஆட சென்றுள்ள உனாத்கத், 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைவார்.
இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் 5ம் வரிசை வீரராக தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடிய சூர்யகுமார் யாதவ் சோபிக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்
ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் இருக்கிறார். வரும் 17ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் பயிற்சியில் உள்ளார். எனவே அவர் 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரது இடத்தில் இறங்கும் சூர்யகுமார் யாதவ், 2வது டெஸ்ட்டில் பொறுப்பாக பேட்டிங் ஆடவேண்டியது அவசியம்.