- Home
- Sports
- Sports Cricket
- வங்கதேசத்தை காலி செய்த ஷமி, கில்! சாம்பியன்ஸ் டிராபியில் மாஸ் காட்டும் இந்தியா
வங்கதேசத்தை காலி செய்த ஷமி, கில்! சாம்பியன்ஸ் டிராபியில் மாஸ் காட்டும் இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தை காலி செய்த ஷமி, கில்! சாம்பியன்ஸ் டிராபியில் வலுக்கும் இந்தியாவின் பலம்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.
229 ரன்கள் இலக்கை இந்திய அணி 46.3 ஓவர்களில் துபாய் ஆடுகளத்தில் சேஸிங் செய்தது. ஷுப்மன் கில் 112 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் தலா 41 ரன்கள் எடுத்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இந்தியா vs வங்கதேசம் போட்டியில் ஐந்து முக்கிய அம்சங்கள்.
ஷமியின் கம்பேக்
1. முகமது ஷமி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினார்
முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், ஷமி அணியில் இருந்தார். ஷமி 10 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் 200 விக்கெட்டுகளை கடந்த 8வது இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.
சரிவில் இருந்து மீண்ட வங்கதேசம்
2. டௌஹித் ஹிரிடோய் மற்றும் ஜேக்கர் அலியின் ஆட்டம்
வங்கதேசம் 35/5 என இருந்தபோது, டௌஹித் ஹிரிடோய் மற்றும் ஜேக்கர் அலி அணியை மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து 154 ரன்கள் சேர்த்தனர். ஜேக்கர் அலி 68 ரன்கள் எடுத்தார். டௌஹித் ஹிரிடோய் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திய ரோகித்
3. ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள்
ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ரோஹித் சர்மா 11,000 ஒருநாள் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் ஆனார். சச்சின், கோலி, கங்குலி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
சதம் விளாசிய கில்
4. ஷுப்மன் கில் அபார ஆட்டம் தொடர்கிறது
ஷுப்மன் கில் 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இது அவருக்கு இரண்டாவது ஒருநாள் சதம் ஆகும். மேலும் ஒருநாள் தரவரிசையில் பாபர் ஆஸமை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
ஃபினிஷிங் ஷாட்
5. கே.எல்.ராகுலின் தாக்கம்
கே.எல்.ராகுல் 41 ரன்கள் எடுத்து கில்லுக்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து 87 ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.