- Home
- Sports
- Sports Cricket
- ஓடிஐ ரேங்க் லிஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா, கோலி நீக்கம்! கொந்தளித்த ரசிகர்கள்! ஐசிசி விளக்கம்!
ஓடிஐ ரேங்க் லிஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா, கோலி நீக்கம்! கொந்தளித்த ரசிகர்கள்! ஐசிசி விளக்கம்!
ஓடிஐ ரேங்க் லிஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா, கோலி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதற்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

Rohit Sharma, Virat Kohli Removed From ICC ODI Rankings
ஐசிசி ஒவ்வொரு வாரமும் ஒருநாள், டெஸ்ட், மற்றும் டி20 தரவரிசைகளை புதுப்பிக்கிறது. இன்று வெளியான ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பெயர்கள் முற்றிலும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் கடந்த வாரம் வரை ஐசிசி ஓடிஐ ரேங்கில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் இருந்தனர்.
ரோகித் சர்மா, விராட் கோலி பெயர் நீக்கம்
ஒரே வாரத்தில் இருவரும் ஐசிசி ரேங்க்கில் இருந்து இருவரும் நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால், இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்த தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இலங்கையின் சரித் அசலங்க ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஓய்வு பெற்று விட்டனரா?
ரோகித் சர்மா மற்றும் கோலியின் பெயர்கள் இல்லாதது, இவர்கள் ஓய்வு அறிவித்துவிட்டதாக ஐசிசி கருதியதா, அல்லது தொழில்நுட்ப பிழையா என்ற கேள்விகளை எழுப்பியது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 வடிவத்திலிருந்தும், 2025 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் இவர்கள் விலகினர்.
தற்போது, ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே இவர்கள் விளையாடும் ஒரே சர்வதேச வடிவமாக உள்ளது. இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் இவர்களின் பெயர்கள் இல்லாதது, இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளனர் என்ற புரளியை தூண்டியது.
ஐசிசி விதி என்ன?
ஐசிசியின் விதிகளின்படி, ஒரு வீரர் 9-12 மாதங்களுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அவரது பெயர் தரவரிசையில் இருந்து நீக்கப்படலாம். ஆனால், ரோகித் சர்மா மற்றும் கோலி இருவரும் கடைசியாக 2025 பிப்ரவரியில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். இதனால் ஐசிசியின் டெக்னிக்கல் பிழை காரணமாக இருவரின் பெயரும் நீக்கப்பட்டு இருக்கலாம் என பலரும் தெரிவித்து வந்தனர்.
எங்கு தவறு நடந்தது?
இந்நிலையில், இருவரின் பெயரும் நீக்கப்பட்டது தொழிநுட்ப கோளாறு என்பது தெரியவந்துள்ளது. இந்த தவறை உணர்ந்த ஐசிசி, உடனடியாக தவறை சரிசெய்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது. புதிய பட்டியலில் ரோகித் மற்றும் கோலி முறையே இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். இது அவர்களின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை என்று ஐசிசி செய்தித் தொடர்பாளர் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.
ரோகித், கோலியின் இலக்கு
ரோகித் மற்றும் கோலி இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட இலக்கு வைத்துள்ள இருவரும் அடுத்ததாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக விளையாடுவார்கள்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 19 அன்று பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கும். தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அக்டோபர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.