- Home
- Sports
- Sports Cricket
- IPL 2023: செம கெத்தாக மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
IPL 2023: செம கெத்தாக மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏப்ரல் 5ம் தேதி கவுஹாத்தியில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் போட்டியில் அபார வெற்றிகளை பெற்று இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கிய நிலையில், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.
இரு அணிகளுமே முந்தைய போட்டியில் அபார வெற்றி பெற்றதால் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், சாம் கரன், நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.