பேட் கம்மின்ஸ் விலகல், மீண்டும் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்
இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட் கம்மின்ஸ்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். இன்னும், ஒரு வாரம் இருக்கும் நிலையில், அவர் 3ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், தனது குடும்பத்தினருடன் இருக்க பேட் கம்மின்ஸ் முடிவு எடுத்துள்ளார்.
பேட் கம்மின்ஸ்
இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியிருப்பதாவது: இந்த தருணத்தில் நான் இந்தியா திரும்ப வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இப்போது எனது குடும்பத்தினருடன் இருப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், மற்றும் சக வீரர்கள் எனக்கு கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். விரைவில் அவர் இந்தூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்
3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய பேட் கம்மின்ஸ் 4ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது என்பது அவரது தாயாரது உடல் நிலையைப் பொறுத்தே அமையும். இதன் காரணமாக இதுவரையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் முதலில் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான், பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் வருகையைப் பொறுத்துதான் ஸ்டீவ் ஸ்மித் 4ஆவது போட்டியில் கேப்டனாக செயல்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் ஸ்டார்க்
இதற்கு முன்னதாக மிட்செல் ஸ்டார்க் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்வீப்சன் முதல் குழந்தை பிறந்துள்ளதைத் தொடர்ந்து நாடு திரும்பினார். டேவிட் வார்னர் காயம் காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுளார்.
டேவிட் வார்னர்
ஜோஸ் ஹசல்வுட் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். பேட் கம்மின்ஸ் 3ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆஷ்டன் அகர் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் அணியிலிருந்து விலகினார். மேட் ரென்ஷா முழங்கால் வலி காரணமாக நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.