- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் 2026: இம்பேக்ட் வீரராக களமிறங்கும் தோனி?.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கும் சிஎஸ்கே!
ஐபிஎல் 2026: இம்பேக்ட் வீரராக களமிறங்கும் தோனி?.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கும் சிஎஸ்கே!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன இம்பேக்ட் வீரர் என்பது குறித்து பார்ப்போம்.

ஐபிஎல் 2026
ஐபிஎல் 2026 தொடர் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 5 கோப்பைகளை கையில் வைத்திருக்கும் சிஎஸ்கே மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிஎஸ்கேவின் துருப்பு சீட்டாக விளங்கிய ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்து விட்டு சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கே நிர்வாகம்.
இம்பேக்ட் வீரராக களமிறங்கும் தோனி
சஞ்சு சாம்சன் தரமான வீரர் என்றாலும் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவை கொடுத்தது ரசிகர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2026 ஐபிஎல்லில் தோனி இம்பேக்ட் வீரராக களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சன் முழு நேர விக்கெட் கீப்பராக உள்ளதால் அவரது கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சில போட்டிகளில் இம்பேக்ட் வீரராக பேட்டிங் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் விரும்பவில்லை
தோனிக்கு 44 வயதாகி விட்டதால் அவரால் களத்தில் அதிக நேரம் நின்று விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது. இதனால் இம்பேக் வீரராக களமிறங்கினால் அவரது உடலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கடைசியில் பினிஷிங் ரோலையும் சிறப்பாக செய்ய முடியும். ஆனால் தோனி முழு நேரமும் களத்தில் இருப்பதை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?
ஐபிஎல் போட்டிகளில்'இம்பாக்ட் பிளேயர்' என்ற விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் அணியில் பிளேயிங் லெவன் எனப்படும் 11 பேர் கொண்ட வீரர்கள் விளையாடுவார்கள். இது தான் விதி.
ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அந்தந்த அணிகள் அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை தேவைக்கு ஏற்றார்போல் அணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது இந்த 5 வீரர்களில் ஒருவரை ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேனாகவோ அல்லது பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கிடைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

