MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • என் உடம்ப பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்திய மீடியாவை வறுத்தெடுத்த மிட்செல் ஸ்டார்க்!

என் உடம்ப பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்திய மீடியாவை வறுத்தெடுத்த மிட்செல் ஸ்டார்க்!

''இந்த காயம் டெல்லி அணிக்கு ஒரு பின்னடைவு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நான் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று மிட்ச்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 28 2026, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மிட்செல் ஸ்டார்க் காயம்
Image Credit : Getty

மிட்செல் ஸ்டார்க் காயம்

IPL 2026 தொடரில் தாமதமாக இணைவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பதிலடி கொடுத்துள்ளார். தனது காயம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய பவுலரான ஸ்டார்க், இன்னும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியுடன் இணையவில்லை. இதனால் சில கிரிக்கெட் வல்லுநர்களும் ரசிகர்களும் கோபமடைந்தனர்.

ஹேமங் பதானி அப்டேட்

முன்னதாக, DC அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, ஸ்டார்க்கின் வருகை குறித்து ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். 'ஸ்டார்க்கின் வருகைக்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தகவலுக்காக காத்திருக்கிறோம். அவரது ஃபிட்னஸ் மற்றும் பணிச்சுமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இருந்து NOC கிடைத்தவுடன் தகவல் தெரிவிப்போம்' என்று அவர் கூறியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தவறான தகவல்கள் பரவுகிறது
Image Credit : Getty

தவறான தகவல்கள் பரவுகிறது

இந்த நிலையில், ஸ்டார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் தற்போது தோள்பட்டை மற்றும் முழங்கை காயத்திலிருந்து மீண்டு வருகிறேன். ஆஸ்திரேலிய தொடரின் போது கூட, இந்த காயத்தின் தீவிரம் எனக்குத் தெரியாது' என்று கூறியுள்ளார். மேலும், தனது IPL பங்கேற்பு குறித்து பரவும் தவறான தகவல்களையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய மீடியாக்கள்

"இந்திய மீடியாவில் உள்ள சில நபர்கள், தங்கள் தளங்களைப் பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். என் உடம்பை பற்றி என்னை விட அவர்களுக்கு அதிகம் தெரிந்தது போல பேசுகிறார்கள். என் IPL பங்கேற்பு குறித்து உறுதியான கருத்துக்களை கூறி, தவறான தகவல்களை உண்மை போல பரப்புகிறார்கள்," என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளார்.

33
மன்னிப்பு கேட்ட ஸ்டார்க்
Image Credit : Getty

மன்னிப்பு கேட்ட ஸ்டார்க்

அதே சமயம், இந்த காயம் காரணமாக தொடரின் ஆரம்பத்தில் பங்கேற்க முடியாததற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடமும், ரசிகர்களிடமும் ஸ்டார்க் மன்னிப்பு கேட்டுள்ளார். விரைவில் குணமடைந்து அணியில் இணைவேன் என்றும், அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

"இந்த காயம் டெல்லி அணிக்கு ஒரு பின்னடைவு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் DC அணியில் இணைய உறுதியாக இருக்கிறேன். அணிக்கு தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறேன். விரைவில் DC அணிக்காக களமிறங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றும் ஸ்டார்க் கூறியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Recommended image2
IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!
Recommended image3
MS Dhoni: “பிளேயரா? மென்டரா?” தோனியின் அடுத்த ரோல் என்ன..? CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
Related Stories
Recommended image1
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
Recommended image2
ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. ரூ.15,300 கோடிக்கு விற்பனை.. புதிய ஓனர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved