- Home
- Sports
- Sports Cricket
- TNPL 2022: ஷாருக்கான் அதிரடி அரைசதம்.. நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்
TNPL 2022: ஷாருக்கான் அதிரடி அரைசதம்.. நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்
ஷாருக்கானின் அதிரடி அரைசதத்தால், டிஎன்பிஎல் 2வது தகுதிச்சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி போட்டியில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும் லைகா கோவை கிங்ஸும் மோதின. கோவையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் வீரர்கள் அதிரடியாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர் நிரஞ்சன் 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். பாபா அபரஜித் 33 பந்தில் 44 ரன்கள் அடித்தார். இந்த சீசன் முழுக்க அபாரமாக பேட்டிங் ஆடிய சஞ்சய் யாதவ், இந்த போட்டியிலும் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவித்தார். அஜிதேஷ் 13 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாச, 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.
209 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய லைகா கோவை கிங்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ஷாருக்கான் அதிரடி அரைசதம் அடிக்க, இலக்கை அடித்து கோவை அணி வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 33 பந்தில் 53 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ஷாருக்கான் 24 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 58 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி, ஃபைனலுக்கு முன்னேறியது. ஜூலை 31 நடக்கும் ஃபைனலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்கொள்கிறது லைகா கோவை கிங்ஸ் அணி.