MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தலையில் பலத்த அடி.. சுருண்டு விழுந்த டெல்லி வீரர்.. களத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்.. IPL-ல் பெரும் சோகம்!

தலையில் பலத்த அடி.. சுருண்டு விழுந்த டெல்லி வீரர்.. களத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்.. IPL-ல் பெரும் சோகம்!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் லுங்கி இங்கிடி தலையில் பலத்த அடி ஏற்பட்டது. அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2 Min read
Author : Rayar A
Published : Apr 25 2026, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதல்
Image Credit : X

டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதல்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டெல்லியில் நடந்து வரும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடஸ்ல் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது. டெல்லியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அட்டகாசமான சதம் விளாசினார். வெறும் 67 பந்துகளில் 16 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 152 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். நிதிஷ் ராணா 44 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 91 ரன்கள் விளாசினார்.

லுங்கி இங்கிடி தலையில் பலத்த அடி

பின்பு பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி இமாலய இலக்கை துரத்தியபோது 3 ஓவரில் சோக சம்பவம் நடந்தது. அதாவது அக்சர் படேல் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தை பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரியான்ஸ் ஆர்யா தூக்கி அடித்தபோது டெல்லி வீரர் லுங்கி இங்கிடி பின்னோக்கி சென்று கேட்ச் செய்ய முயற்சி செய்தார். ஆனால் பந்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அவர் பின்னோக்கி கிழே விழுந்தபோது தலையில் பலத்த அடி ஏற்பட்டது. மேலும் அவரது கழுத்து பகுதி அப்படியே மடங்கியபடியே விழுந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
களத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்
Image Credit : X (Twitter)

களத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்

இதனால் வலியால் அலறித் துடித்த அவர் அப்படியே சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரர்கள் லுங்கி இங்கிடி பக்கம் சென்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அணியின் பிசியோக்கள் களத்துக்கு வந்தனர். அவர்களிடம் சிறிது பேசிய லுங்கி இங்கிடி தொடர்ந்து எழ முடியாமல் அப்படியே கிடைந்தார். இதனால் களத்துக்குள்ளேயே ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு லூங்கி இங்கிடியை ஸ்டெச்சர் மூலம் ஆம்புலன்ஸ்க்கு கொண்டு சென்று உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தலையில் படுகாயம் அடைந்த லுங்கி இங்கிடிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்துக்குளேயே பீல்டிங் செய்தபோது லூங்கி இங்கிடியின் தலையில் அடிப்பட்டது இரு அணி வீரர்களிடமும் பெரும் சோகம் ஏற்பட்டது. லூங்கி இங்கிடியின் நிலைமை எப்படி இருக்கிறது? அவரது காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து முழு விவரம் ஏதும் தெரியவில்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
டெல்லி கேபிடல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
IPL: ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? முதன் முறையாக மெளனம் கலைத்த KKR..அட! இதெல்லாம் ஒரு காரணமா?
Recommended image2
IPL: சிஎஸ்கே போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved