MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL: ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? முதன் முறையாக மெளனம் கலைத்த KKR..அட! இதெல்லாம் ஒரு காரணமா?

IPL: ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? முதன் முறையாக மெளனம் கலைத்த KKR..அட! இதெல்லாம் ஒரு காரணமா?

IPL 2026: நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அசத்தி வருகிறார். இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில், பஞ்சாப் கேப்டனான அவர் 208 ரன்கள் எடுத்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 24 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் தொடரில் தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
Image Credit : ANI

ஐபிஎல் தொடரில் தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏற்கனவே கோப்பையை கையில் ஏந்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபப்ட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்புகிறார். KKR அணிக்கு 2024ம் ஆண்டு கோப்பையை பெற்றுக் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுத்தது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி அளித்தது.

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்?

KKR-ல் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஸ்ரேயாஸ் 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியில் சேர்ந்தார். அவர் கடந்த ஐபிஎல் சீசனில் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இதனால் ஷ்ரேயாஸ் கொல்கத்தாவில் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், 2024-ல் ஐபிஎல் (IPL 2024) கோப்பையை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை (Shreyas Iyer) அணியிலிருந்து விடுவித்தது ஒரு தவறான முடிவு என்று KKR-ன் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஒப்புக்கொண்டுள்ளார்.

24
ஸ்ரேயாஸ் ஒரு தரமான வீரர்
Image Credit : ANI

ஸ்ரேயாஸ் ஒரு தரமான வீரர்

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், ''துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவருடைய (ஸ்ரேயாஸ் ஐயர்) இழப்பை இப்போது உணர்கிறோம். ஸ்ரேயாஸ் ஒரு தரமான வீரர். அவர் KKR-ன் கேப்டனாக கோப்பையை வென்றவர். அவர் அணியை வழிநடத்திய விதம் என்னைக் கவர்ந்தது. ஆனால் சில நேரங்களில், சில சூழ்நிலைகளும், அணியின் பெரிய திட்டங்களும் இது போன்ற வீரர்களை விடுவிக்க நிர்பந்திக்கின்றன. KKR பயிற்சியாளராக அந்த நேரத்தில் நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஸ்ரேயாஸ் வேண்டுமென்றே அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவரை விடுவித்த முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை' என்று கூறியுள்ளார்.

Related Articles

Related image1
CSK-வுக்கு பெரிய அடி.. IPL-ல் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்.. மாற்று வீரர் யார்? புதிய அப்டேட்!
Related image2
IPL: சிஎஸ்கே போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம்?
34
சிறந்த வீரர்களை விடுவித்துவிட்டு சிக்கலில் KKR
Image Credit : ANI

சிறந்த வீரர்களை விடுவித்துவிட்டு சிக்கலில் KKR

மேலும் ஸ்ரேயாஸ் மட்டுமின்றி பில் சால்ட் போன்ற அதிரடி வீரரையும் விட்டு விட்டதாக சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''நாங்கள் ஸ்ரேயாஸை மட்டும் விடுவிக்கவில்லை, ஃபில் சால்ட் உள்பட நாங்கள் விடுவித்த மற்ற வீரர்களைப் பற்றியும் எனக்கு இதே போன்ற உணர்வுதான் இருந்தது. அணி உரிமையாளர்களின் அணுகுமுறை என்னைக் கவர்ந்துள்ளது. ஷாருக் கான் (Shah Rukh Khan), ஜூஹி சாவ்லா (Juhi Chawla) மற்றும் சிஇஓ வெங்க்கி மைசூர் (Venky Mysore) ஆகியோர் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர்' என்றார்.

44
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்ரேயாஸ்
Image Credit : ANI

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்ரேயாஸ்

ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்களாக ஸ்ரேயாஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீசனிலும் அவர் அசத்தி வருகிறார். இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில், பஞ்சாப் கேப்டனான அவர் 208 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 182.45 ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் தான். ஆறு போட்டிகளில் 11 புள்ளிகளுடன் ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாயின் இறுதிச்சடங்கு முடிந்ததும் களமிறங்கிய CSK வீரர்... வெற்றியை சமர்ப்பித்து நெகிழ வைத்த ருதுராஜ்..!
Recommended image2
மும்பையை கதற விட்ட சஞ்சு சாம்சன்.. மிரட்டல் சதம்.. சிஎஸ்கேவுக்காக புதிய சாதனை படைத்த சேட்டன்!
Recommended image3
CSK vs MI: மாஸ் கம்பேக் கொடுக்கும் தோனி?.. சிக்சர் மன்னனும் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
CSK-வுக்கு பெரிய அடி.. IPL-ல் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்.. மாற்று வீரர் யார்? புதிய அப்டேட்!
Recommended image2
IPL: சிஎஸ்கே போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved