- Home
- Sports
- Sports Cricket
- Women's T20 WC: யார் கூட தோற்றாலும் பாகிஸ்தான் கூட தோற்க கூடாது.. ஏன்னா அவங்க??? ஜெமிமா ஆவேசம்!
Women's T20 WC: யார் கூட தோற்றாலும் பாகிஸ்தான் கூட தோற்க கூடாது.. ஏன்னா அவங்க??? ஜெமிமா ஆவேசம்!
Women's T20 WC: மகளிர் T20 உலகக் கோப்பையில் யார் கூட தோற்றாலும் பாகிஸ்தான் கூட மட்டும் தோற்க கூடாது என்று இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மகளிர் உலகக்கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் போட்டி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (ICC Women's T20 World Cup) ஜூன் 12 (நேற்று) முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் நடக்கும் இந்த தொடர் ஜூலை 5 வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, தற்போது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் தங்களின் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல ரெடியாக உள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 14ம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆகவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், யார் கூட தோற்றாலும் பாகிஸ்தான் கூட மட்டும் தோற்க கூடாது என இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் கூட மட்டும் தோற்க கூடாது
இது தொடர்பாக பேசிய அவர், ''நான் சிறுமியாக இருக்கும்போதே இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். நான் வளர்ந்த காலத்திலிருந்தே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே பெரிய விஷயம் தான். என்னுடைய பில்டிங் வாட்ச்மேன் கூட என்னிடம் வந்து, 'யாருடன் வேண்டுமானாலும் தோற்றுப்போங்கள், ஆனால் பாகிஸ்தானிடம் மட்டும் தோற்கக் கூடாது' என்று கூறுவார்.
மக்கள் கிரிக்கெட்டை அவ்வளவு நேசிப்பதால் தான் இத்தகைய அழுத்தம் உருவாகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதலை மக்கள் அந்த அளவிற்கு விரும்புகிறார்கள். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, இரு நாட்டு ரசிகர்களின் உணர்வு கலந்த விஷயம்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், தற்போதைய இந்திய மகளிர் அணி எந்தவொரு அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், களத்தில் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா, பாகிஸ்தான் போட்டி தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) நெட்வொர்க் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (Star Sports 1 Tamil) சேனலில் நீங்கள் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். இது தவிர ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்களிலும் போட்டிகள் ஒளிபரப்பப்படும்.
2026 ICC மகளிர் T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தனி ஷர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், கிராந்தி, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ்

