MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது? எந்த டிவியில் பார்க்கலாம்? முழு விவரம்!

T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதல் எப்போது? எந்த டிவியில் பார்க்கலாம்? முழு விவரம்!

Women's T20 World Cup: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய அணி போட்டிகளின் அட்டவணை மற்றும் இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 11 2026, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026
Image Credit : Getty

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (ICC Women's T20 World Cup) ஜூன் 12 (நாளை) முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, தற்போது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் தங்களின் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல ரெடியாக உள்ளது.

இந்திய அணி எந்த பிரிவு?

இந்த முறை தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை தலா 6 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி பிரிவு 1-இல் (Group 1) இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது?
Image Credit : Getty

இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது?

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பர்மிங்காமில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி 2வது போட்டியில் ஜூன் 17 (புதன்கிழமை) நெதர்லாந்துடன் மோதுகிறது. இது தவிர ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவுடனும், ஜூன் 25 (வியாழக்கிழமை) வங்கதேசத்துடனும், ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதுகிறது.

Related Articles

Related image1
Women's T20 World Cup: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி ரெடி! முதல் மேட்ச்சே பாகிஸ்தானுடன் மோதல்!
Related image2
T20 World Cup Prize Money: T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி கிடைத்தது?
33
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்?
Image Credit : Instagram/nandnisharma__

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) நெட்வொர்க் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (Star Sports 1 Tamil) சேனலில் நீங்கள் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். இது தவிர ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்களிலும் போட்டிகள் ஒளிபரப்பப்படும்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை ஓடிடியில் பார்க்கலாமா?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Recommended image2
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!
Recommended image3
TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
Related Stories
Recommended image1
Women's T20 World Cup: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி ரெடி! முதல் மேட்ச்சே பாகிஸ்தானுடன் மோதல்!
Recommended image2
T20 World Cup Prize Money: T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி கிடைத்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved