19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஐபிஎல் 2025 ஏலம்!
List of U19 World Cup Winners Unsold in IPL 2025 Auction : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
IPL 2025 Auction, Yash Dhull
1. யஷ் துல்
List of U19 World Cup Winners Unsold in IPL 2025 Auction : 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை 2022 இல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இளம் வீரர் யஷ் துல் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஏலம் எடுக்கப்படவில்லை. துல் நவம்பர் 11, 2002 இல் பிறந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். 2021–22 ரஞ்சி கோப்பையில் தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். அறிமுக நாளில் 2 சதங்கள் அடித்தார். 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2021 ஏசிசி 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக யஷ் துல் இருந்தார்.
Shivam Mavi, IPL 2025 Auction
2. ஷிவம் மாவி
ஷிவம் மாவி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை 2018 இந்திய அணியில் இடம் பெற்றார், ஆனால் அவர் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுக்கப்படவில்லை. முன்னதாக அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடினார். 140+ வேகத்தில் பந்துகளை வீசக்கூடிய சிவம் மாவி காயம் காரணமாக சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.
Alzarri Joseph, IPL 2025 Auction
3. அல்சாரி ஜோசப்
அல்சாரி ஜோசப் 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார், ஆனால் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் ஏலம் எடுக்கப்படவில்லை. அல்சாரி ஜோசப் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் பதிவு செய்திருந்தார். ஐபிஎல் கடைசி சீசனில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரின் ஐபிஎல் பயணம் 2019 இல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Harvik Desai, IPL 2025 Auction
4. ஹார்விக் தேசாய்
ஹார்விக் தேசாய் 2018 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். ஆனால் ஐபிஎல் ஏலம் 2025ல் ஏலம் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் 2024 இல் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prithvi Shaw, IPL 2025 Auction
5. பிரித்வி ஷா
19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை 2018 ஐ வென்ற இந்திய அணிக்கு பிரித்வி ஷா கேப்டனாக இருந்தார். ஆனால் ஐபிஎல் 2025ல் ஏலம் எடுக்கப்படவில்லை. இந்திய அணிக்காகவும் அவர் பல அற்புதமான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். இருப்பினும், தொடர்ச்சியான சர்ச்சைகள், உடற்தகுதி இல்லாததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐபிஎல்லில் இருந்தும் விலகியுள்ளார்.