87 வருட சாதனையை முறியடித்த ஆண்டர்சன்: நம்பர் 1 இடம் பெற்று சாதனை!
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், 374 ரன்கள் சேர்த்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இதையடுத்து, 393 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து 267 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில், இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டும் கைப்பற்றினார். இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி 40 வயது 207 நாட்களில் முதலிடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
ஆண்டர்சன்
இதற்கு முன்னதாக கடந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கிளாரி கிரிம்மெட் 1936 ஆம் ஆண்டு படைத்த சாதனையை தற்போது ஆண்டர்சன் முறியடித்துள்ளார். தற்போது ஆண்டர்சன் 866 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் 2018 ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்தார்.
ஆண்டர்சன்
ஐந்து மாதங்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவிடம் தனது முதலிடத்தை இழந்தார். அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 682 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளுகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இவருக்கும், ஆண்டர்சனுக்கும் 2 புள்ளிகள் தான் வித்தியாசம்.