MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரஞ்சி தொடரில் நல்லா ஆடுறவங்களுக்கு மதிப்பே இல்லையா? அந்த பையனை எப்படி புறக்கணிக்கலாம்? இர்ஃபான் பதான் ஆதங்கம்

ரஞ்சி தொடரில் நல்லா ஆடுறவங்களுக்கு மதிப்பே இல்லையா? அந்த பையனை எப்படி புறக்கணிக்கலாம்? இர்ஃபான் பதான் ஆதங்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 14 2023, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
 

27

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அடங்கிய நீண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாப்ள - ஓஜா

37

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அனியில் ராகுல், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் ஆடமுடியாததால், கேஎஸ் பரத் முதன்மை விக்கெட் கீப்பராகவும், 2வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

47

ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கத் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். சூர்யகுமார் யாதவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

57

டெஸ்ட் அணி தேர்வு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் வீரர்கள் ஆடுவதன் அடிப்படையில் அமையவேண்டும். அப்படி பார்க்கப்போனால் ரஞ்சி தொடரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி இரட்டை சதம், முச்சதம் என பெரிய ஸ்கோர்களை அடித்து மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் எடுக்கப்படவில்லை. 

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த வீரர்..! மிகப்பெரிய மேட்ச் வின்னருக்கு காம்ரான் அக்மல் புகழாரம்

67

சர்ஃபராஸ் கான் 34 ரஞ்சி போட்டிகளில் ஆடி 11 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களுடன் 3175 ரன்களை குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 301* ஆகும். ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடியும் சர்ஃபராஸ் கானை இந்திய டெஸ்ட் அணியில் எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் இர்ஃபான் பதான். டெஸ்ட் அணி தேர்வு, ரஞ்சி டிராபி பெர்ஃபாமன்ஸை பொறுத்தே அமையவேண்டும் என்றும் இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.

77

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாச் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத், சூர்யகுமார் யாதவ்.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
Recommended image2
ஜிம்பாப்வேயை நசுக்கிய WI.. 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. எகிறிய ரன் ரேட்.. இந்தியாவுக்கு நெருக்கடி!
Recommended image3
தோல்வி பயம்: ஆடிப்போன இந்திய அணி! அந்த 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. டி20 உலகக்கோப்பையில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved