- Home
- Sports
- Sports Cricket
- IPL Trade: ஐபிஎல் வீரர்கள் பரிமாற்றம் எப்படி நடைபெறும்? என்னென்ன விதிகள்? இதோ முழு விவரம்!
IPL Trade: ஐபிஎல் வீரர்கள் பரிமாற்றம் எப்படி நடைபெறும்? என்னென்ன விதிகள்? இதோ முழு விவரம்!
IPL Trade Window 2025: 19வது ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக, வீரர்களின் டிரேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் டிரேடு விதிகள் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதைப் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல் டிரேடு விதிகள்
ஐபிஎல் டிரேடு எனப்படும் வீரர்கள் பரிமாற்றம் ஐபிஎல் சீசன் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு திறக்கப்படும். இது வரவிருக்கும் வீரர்கள் ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை செயல்பாட்டில் இருக்கும்.
இரண்டு வகையான டிரேடு
இந்த டிரேடு விதிகளை பொறுத்தவரை அணிகள் ஒன்-வே டிரேடு (மற்றொரு அணிக்கு பணம் கொடுத்து வீரரை வாங்குவது) அல்லது டூ-வே ஸ்வாப்ஸ் (வீரர்களைப் பரிமாறிக்கொள்வது) முறையில் டிரேடு செய்யலாம்.
பிசிசிஐ கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்
ஐபிஎல் அணிகள் வீரர்களை டிரேடு செய்ய விரும்பினால், முதலில் அந்த அணி பிசிசிஐயிடம், 'இந்த வீரரை டிரேடு செய்ய ஆர்வமாக உள்ளோம்' என்று தெரிவிக்க வேண்டும். இதற்கு விற்கும் அணி 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
வீரர்களின் ஒப்புதல் முக்கியம்
ஒரு வீரர் புதிய அணியில் சேர சம்மதித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அவரை டிரேடு செய்ய முடியும். அவர் சம்மதிக்காதபட்சத்தில் டிரேடு செய்ய முடியாது.
கூடுதல் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு
ஒருவேளை அணி அதிக கட்டணம் கோரினால், அந்த கூடுதல் தொகையை வீரரும், விற்பனை செய்த அணியும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.
வீரர்கள் டிரேடிங்கிற்கு வரம்பில்லை
ஒரு அணி மற்றொரு அணியுடன் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் டிரேடு செய்து கொள்ளலாம். இதற்கு எந்த வரம்பும் இல்லை. இரு அணிகளின் விருப்பம் இருந்தால் மட்டும் போதும்.
உடற்தகுதி முக்கியம்
விற்கும் அணி மற்றும் வாங்கும் அணி, டிரேடு செய்வதற்கு முன்பு அந்த வீரர் மருத்துவ ரீதியாக முழு தகுதியுடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிசிசிஐக்கு முழு அதிகாரம்
இந்த வீரர்கள் டிரேடிங்கில் ஏதேனும் விதிகள் மீறப்பட்டால், டிரேடிங்கை ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் பிசிசிஐக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.