- Home
- Sports
- Sports Cricket
- RCB vs GT: பந்து தரையில் பட்டதா இல்லையா? ஐபிஎல் 2026 பைனலில் அம்பயரை அலறவிட்ட ரஜத் படிதார்!
RCB vs GT: பந்து தரையில் பட்டதா இல்லையா? ஐபிஎல் 2026 பைனலில் அம்பயரை அலறவிட்ட ரஜத் படிதார்!
RCB vs GT: ஐபிஎல் 2026 குஜராத், ஆர்சிபி பைனலில் வாஷிங்டன் சுந்தருக்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அவர் அவுட் என ஆர்சிபி வீரர் பிடித்த கேட்ச் சரியானது என ரஜத் படிதார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஐபிஎல் 2026 பைனல்
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி பாஸ்ட் பவுலர்கள் சூப்பராக பந்துவீசினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில் (10 ரன்) ஜோஸ் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். ரன் மெஷின் சாய் சுதர்சனும் 12 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் வீழ்ந்தார். அதிரடி வீரர் ஜோஸ் படலரும் (19) குர்னால் பாண்ட்யா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ராகுல் தெவாட்டியா
வாஷிங்டன் சுந்தர் பொறுப்பான அரை சதம்
மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். ஆர்சிபி தரப்பில் ராசிக் சலாம் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், குர்னால் பாண்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வாஷிங்டன் சுந்தருக்கு அவுட் கொடுக்காதது ஏன்?
இந்த போட்டியில் குஜராத் அணிக்காக தனி ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர் முன்னதாக சொற்ப ரன்களில் அவுட்டாகி இருக்க வேண்டியது. அதாவது ஜேக்கப் டபி பந்தில் வாஷிங்டன் சுந்தர் அடித்த ஷாட் ஒன்று, பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றிருந்த பெங்களூரு அணியின் ஃபீல்டர் ஜோர்டான் காக்ஸிடம் கேட்ச் ஆகச் சென்றது. காக்ஸ் மிகவும் சாதுரியமாக ஓடிவந்து அந்தப் பந்தைக் கைகளில் ஏந்தினார். பெங்களூரு வீரர்கள் அனைவரும் அது விக்கெட் என்று கொண்டாட்டத்தில் குதித்தனர். ஆனால், பந்து தரையில் பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில், கள நடுவர்கள் இந்த முடிவை மூன்றாவது நடுவரின் (Third Umpire) பார்வைக்குக் கொண்டு சென்றனர்.
நடுவருடன் ரஜத் படிதார் வாக்குவாதம்
பல்வேறு கோணங்களில் இருந்து வீடியோ மறுபதிவை (Replay) ஆராய்ந்த மூன்றாவது நடுவர், பந்து ஃபீல்டரின் கைகளில் தங்குவதற்கு முன்னதாக தரையைத் தொட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்தார். இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு நாட்-அவுட் (NOT OUT) என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவைக் கேட்டதும் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார். பந்து முழுமையாக ஃபீல்டரின் விரல்களுக்குள் கட்டுப்பட்ட பிறகே தரையைத் தொட்டது என்று கூறி அவர் கள நடுவர்களுடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆர்சிபி ரசிகர்கள் கேள்வி
ஏற்கெனவே இந்த இரு அணிகளும் விளையாடிய லீக் போட்டியில் ரஜத் படிதார் கேட்ச்சை குஜராத் வீரர் ஜேசன் ஹோல்டர் பாய்ந்து பிடித்தார். ரீப்ளையில் பந்து தரையில் உரசியதுபோல் தெரிந்தது. ஆனாலும் நடுவர் ரஜத் படிதார் அவுட் என அறிவித்தார். இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த கேட்ச் பந்த் தரையில் பட்டதுபோல் என தெரிந்ததால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆர்சிபிக்கு ஒரு நியாயம், குஜராத்துக்கு ஒரு நியாயமா? என ஆர்சிபி ரசிகர்கள் பொங்கியெழுந்தனர்.

