வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் மரணம்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வின் தந்தை திலக் யாதவ் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
இந்திய ராணுவம் மற்றும் போலீஸ் படையில் சேர விரும்பிய உமேஷ் யாதவ்விற்கு தோல்வி தான் மிஞ்சியது. சரி, கல்லூரியில் உள்ள கிரிக்கெட் டீமில் சேர நினைத்து, முயற்சித்துள்ளார். ஆனால், எந்த கிரிக்கெட் கிளப்பிலும் இணைந்து ஆடாததால், கல்லூரி கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு மறுக்கப்பட்டுள்ளார்.
உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
அப்போது, 2007 ஆம் ஆண்டு விதர்பா ஜிம்கானா அணியில் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து இடத்திற்கு முன்னேறி இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது கூட இந்தியா வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
ஆனால், எதிர்பாராதவிதமாக உமேஷ் யாதவ்வின் தந்தை திலக் யாதவ் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். மல்யுத்த வீரராக திகழ்ந்த திலக் யாதவ், கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
எனினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். அப்படியிருந்தும் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து திலக் யாதவ் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவே அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் நேற்று மாலை திடீரென்று உயரிந்துள்ளார். திலக் யாதவ்வின் இறுதிச்சடங்கு நாக்பூரிலுள்ள கோலார் ஆற்றங்கரையில் நடந்துள்ளது.
உமேஷ் யாதவ்வின் தந்தை திடீர் காலமானார்
இவருக்கு கமலேஷ், உமேஷ் மற்றும் ரமேஷ் என்று மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். உமேஷ் யாதவ் 54 டெஸ்ட் போட்டிகள், 75 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 164 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டியில் 106 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.