- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ எப்போது தொடங்கும்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ எப்போது தொடங்கும்? எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி எப்போது தொடங்கும்? எந்த டிவியில் பார்க்கலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மழையால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் இந்திய அணி 136 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ
முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்தனர். ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில்லாலும் ஃபார்முக்கு வர முடியவில்லை. இந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது போட்டி அடிலெய்நாளை (அக்டோபர் 23) நடைபெற உள்ளது.
2015க்கு பிறகு தொடரை வெல்லாத இந்தியா
தொடரை தக்க வைக்க வேண்டுமானால் இந்தியா இந்த போட்டியில் வெல்வது கட்டாயமாகும். 2015க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. அதன் பிறகு நடந்த மூன்று ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தது.
2015-ல் தோனி தலைமையிலும், 2018 மற்றும் 2020-ல் கோலி தலைமையிலும் இந்தியா தோற்றது. தோனி தலைமையில் 4-1, கோலி தலைமையில் 2-1, 2-1 என இந்தியா தொடரை இழந்தது. இப்போது 2வது ஓடிஐ எப்போது தொடங்கும் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
போட்டி தொடங்கும் நேரம்; எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐயை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்ணனையுடன் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒரு நாள் போட்டியை ஓடிடியில் பார்க்கலாமா?
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒரு நாள் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒரு நாள் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்கும். அரை மணி நேரத்துக்கு முன்பாக 8.30 மணிக்கு டாஸ் போடப்படும்.