- Home
- Sports
- Sports Cricket
- Shreyas: கேப்டனாக இப்படியா தொடக்கம்? அயர்லாந்திடம் வரலாற்று தோல்வி... ஷ்ரேயாஸ்ன் வைரல் ரியாக்ஷன்!
Shreyas: கேப்டனாக இப்படியா தொடக்கம்? அயர்லாந்திடம் வரலாற்று தோல்வி... ஷ்ரேயாஸ்ன் வைரல் ரியாக்ஷன்!
அயர்லாந்திடம் முதல் முறையாக தோல்வியைச் சந்தித்து இந்திய அணி வரலாற்று அதிர்ச்சியை எதிர்கொண்டது. அதே நேரத்தில், 'Great Start as Captain' என ஷ்ரேயாஸ் ஐயர் நகைச்சுவையாக கூறிய ஒரு வரி ரசிகர்களிடையே வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்படி ஒரு தொடக்கமா..?
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் அயர்லாந்து, இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்தப் போட்டி, இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற முதல் போட்டியாகவும் அமைந்தது.
Great start as a captain
போட்டி முடிந்த பிறகு, பரிசளிப்பு விழாவில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், "Great start as a captain" என்று சிரித்தபடியே கிண்டலாகக் கூறி தனது உரையைத் தொடங்கினார். அதன்பின், ஆட்டத்தில் இந்தியா எங்கு தவறியது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஐயர் கூறுகையில், தொடக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்தை அழுத்தத்திற்குள் வைத்திருந்ததாக தெரிவித்தார். ஆனால் மிடில் ஓவர்களில் திட்டமிட்டபடி பந்துவீச முடியாததால் எதிரணிக்கு மீண்டு வர வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். குறிப்பாக, நேராக அடிக்கும் பகுதிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததே போட்டியின் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் விளக்கினார்.
எதிரணியை குறைத்து மதிப்பிடக்கூடாது..
இருப்பினும், கடைசி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதாகவும், அந்த ஆடுகளத்தில் 182 ரன்கள் சவாலான இலக்காக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டிங்கில் இந்தியா இலக்கை துரத்தும்போது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தோல்விக்குப் பிறகும் நம்பிக்கையை இழக்காத ஐயர், அடுத்த போட்டியில் முழு ஆக்ரோஷத்துடன் களமிறங்குவோம் என்று தெரிவித்தார். "நடந்ததை மறந்து, இந்தப் போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் அனைத்து வலிமையுடனும் திரும்புவோம்" என்றார்.
மேலும், "வெறும் மைதானத்துக்கு வந்தாலே வெற்றி கிடைக்காது. ஒவ்வொரு தருணத்திலும் கடினமாக உழைக்க வேண்டும். எதிரணியை எந்த நேரத்திலும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வலியுறுத்தினார்.

