MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய இந்தியா அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா அதிரடி அரைசதம் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 25 2026, 11:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மகளிர் டி20 உலகக்கோப்பை
Image Credit : Asianet News

மகளிர் டி20 உலகக்கோப்பை

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. குரூப் சுற்றின் முக்கியமான போட்டியில், வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தவிடுபொடியாக்கியது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த வங்கதேச கணக்குகளை, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே தவிடுபொடியாக்கினர்.

இந்திய அணி சூப்பர் பவுலிங்

மிகவும் துல்லியமாக பந்துவீசிய இந்திய வீராங்கனைகளுக்கு முன்னால், எதிரணி பேட்டர்கள் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு திணறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. இந்தியாவுக்காக சிறப்பாக பந்துவீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ், 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மிடில் ஆர்டரின் முதுகெலும்பை முறித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஷஃபாலி வர்மா அதிரடி
Image Credit : Getty

ஷஃபாலி வர்மா அதிரடி

137 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (8) மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், யாஸ்திகா பாட்டியா (18 பந்தில் 23) மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்தபோது ஷஃபாலியும், 100 ரன்களை எட்டுவதற்குள் யாஸ்திகா பாட்டியா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் ஆட்டமிழந்ததால், இந்திய அணி சற்று தடுமாறியது.

ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (15 பந்தில் 26) மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (14 பந்தில் 13*) ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. வெற்றிக்கு அருகே ஜெமிமா ஆட்டமிழந்தாலும், தீப்தி ஷர்மாவுடன் இணைந்து ஹர்மன்ப்ரீத் கௌர் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலகக்கை எட்டிப் பிடித்தது.

33
ஆஸ்திரேலியாவுடன் முக்கியமான போட்டி
Image Credit : Getty

ஆஸ்திரேலியாவுடன் முக்கியமான போட்டி

34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் கொடுத்த தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Related Stories
Recommended image1
T20 World Cup: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி... கோட்டைவிட்ட 5 முக்கிய தவறுகள்!
Recommended image2
Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved