- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம்.. பயிற்சியாளர் சொன்ன முக்கிய அப்டேட்!
IND vs NZ 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம்.. பயிற்சியாளர் சொன்ன முக்கிய அப்டேட்!
IND vs NZ 5-வது டி20 போட்டி சஞ்சு சாம்சனுக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும். இதில் மட்டும் சஞ்சு சொதப்பினால் டி20 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வாய்ப்பை மறந்து விட வேண்டியது தான்.

தடுமாறும் சஞ்சு சாம்சன்
நியூசிலாந்து தொடரில் தடுமாறி வரும் சஞ்சு சாம்சன் கடைசி டி20 போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிட்டான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், இந்தப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் வீரர்
இது தொடர்பாக பேசிய ர் சிட்டான்ஷு கோடக், ''சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் வீரர். அவர் மிகவும் திறமையானவர். எல்லோரும் விரும்புவது போல் அவர் அதிக ரன்கள் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் அது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதி. சில நேரங்களில் நீங்கள் தொடர்ந்து ஐந்து இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவிப்பீர்கள், சில நேரங்களில் சற்று ரன் வறட்சி ஏற்படும்.
இந்தியாவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்
எனவே, ஒரு தனிப்பட்ட வீரர் தனது மனதை எப்படி வலுவாக வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தது. வெளிப்படையாக, அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது எங்கள் வேலை. அவர் பயிற்சி செய்கிறார், கடினமாக உழைக்கிறார். சஞ்சுவால் என்ன செய்ய முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, சஞ்சுவைப் பற்றி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை, ஏனெனில் அவர் இந்தியாவுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு வாழ்வா? சாவா? போட்டி
இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்துடன் திருவனந்தபுரத்தில் நாளை மோதுகிறது.
தொடர் ஏற்கனவே முடிவாகிவிட்டாலும், தொடக்க வீரராகத் தடுமாறி வரும் சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதா அல்லது கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியை ஜார்கண்ட் அணிக்கு வென்று தந்த, சூப்பர் ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்ப்பதா என்ற முக்கிய முடிவை எடுக்க இந்திய அணிக்கு இந்தப் போட்டி உதவியாக இருக்கும்.

