- Home
- Sports
- Sports Cricket
- T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்.. ஓப்பனாக பேசிய ஜாம்பவான்!
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்.. ஓப்பனாக பேசிய ஜாம்பவான்!
பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக சொதப்பி வரும் சஞ்சு சாம்சனை டி20 உலகக்கோப்பையில் நீக்கி விட்டு இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன

கடுமையாக சொதப்பும் சஞ்சு சாம்சன்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக சொதப்பி வருகிறார். இந்த தொடரின் 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட அவர் 25 ரன்களை தாண்டவில்லை.
விக்கெட் கீப்பிங்கிலும் பந்துகளை சரிவர பிடிக்காமல் திணறி வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷனை இடம்பெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''"நான் இந்திய அணியின் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டிக்கு சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷனை விளையாட வைப்பேன். சஞ்சுவை வெளியே அமர வைத்துவிட்டு, இஷானை விக்கெட் கீப்பர்-பேட்டராகத் தேர்வு செய்வேன்.
டி20 உலகக்கோப்பையில் இஷான் கிஷன்
T20 உலகக் கோப்பைக்கான எனது பிரதான கீப்பராக இஷானை நான் விரும்பினால், ஐந்தாவது T20I மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் அவரை தான் ஆட வைப்பேன்.
உலகக் கோப்பைக்கு முன்பு திலக் வர்மா தகுதியுடன் இருப்பார். அறிக்கைகளும் அதையே கூறுகின்றன. அவர் முழு தகுதியுடன் இருந்தால், அவருக்காக ஒரு இடத்தை வைத்திருக்க வேண்டும். எனவே, அந்த முடிவு வரப்போகிறது என்றால், ஏன் காத்திருக்க வேண்டும்?
நன்றாக பேட்டிங் செய்யும் இளம் வீரர்
இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இப்போது இஷான் கிஷனை விளையாட வையுங்கள். இஷான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்து நன்றாக பேட்டிங் செய்துள்ளார். அவர் T20 உலகக் கோப்பையிலும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டியிருக்கும்.
எனவே ஏன் இப்போது தொடங்கக்கூடாது? கடைசிப் போட்டி உள்நாட்டில் நடந்தாலும், உலகக் கோப்பைத் தயாரிப்புக்காக, நான் நிச்சயமாக இஷான் கிஷனை விக்கெட் கீப்பர்-ஓப்பனராக விளையாட வைப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

