MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!

IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!

India vs Afghanistan Test: இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jun 02 2026, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா, ஆப்கானிஸ்தான் ஒரே ஒரு டெஸ்ட்
Image Credit : x

இந்தியா, ஆப்கானிஸ்தான் ஒரே ஒரு டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா சிங் பிசிஏ மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாள் ஆட்டமும் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களைக் கொண்ட பலமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவமிக்க கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுவார். பிசிசிஐ அண்மையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திய அணி எப்படி?
Image Credit : ANI

இந்திய அணி எப்படி?

அதன்படி இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஹர்ஷ் துபே, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் இட்ம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்த்தால் இடதுகை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை கில் நடுவரிசையிலும் சாய் சுதர்சன் ஒப்பனிங் இறங்கவும் வாய்ப்புள்ளது.

அனுபவமிக்க கே.எல். ராகுல் 3-வது அல்லது 4-வது வரிசையிலும், தேவ்தத் படிக்கல் அடுத்த வரிசையிலும் களம் காண்பார்கள். நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியின் முதன்மை கீப்பராகச் செயல்படுவார். சண்டிகர் மைதானத்தின் பிட்ச் தன்மையைப் பொறுத்து இந்தியா 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
ஐபிஎல் குறைத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்..! இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!
Related image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
34
பாஸ்ட் பவுலிங் பலம்
Image Credit : ANI

பாஸ்ட் பவுலிங் பலம்

வேகப்பந்து வீச்சை முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் முன்னெடுப்பார்கள். ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி 3-வது வேகப்பந்து வீச்சாளராக கைகொடுப்பார். சுழற்பந்து வீச்சில் சீனியர் வீரர் குல்தீப் யாதவ் உடன் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதர் அல்லது ஹர்ஷ் துபே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : Getty

இந்திய அணி பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் அல்லது ஹர்ஷ் துபே.

இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைந்த கையோடு, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரில் பங்கேற்க உள்ளன. அந்த ஒருநாள் தொடர் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
ஆப்கானிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
Recommended image3
Ind Vs Eng: பெத்தேல் அதிரடியால் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து.. டி20 தொடரில் முன்னிலை..
Related Stories
Recommended image1
ஐபிஎல் குறைத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்..! இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!
Recommended image2
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved