500 விக்கெட்டுகள் கைப்பற்ற காத்திருக்கும் அஸ்வின், பிளேயிங் 11ல் இடம் பெறுவாரா?
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் இடம் பெற்று விளையாடினால் 11 விக்கெட்டுகள் எடுத்து 500 விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
Ashwin Team India
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு செஞ்சூரியலில் நடக்கிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால், ஒரு தொடரை கூட கைப்பற்றவில்லை.
Ravichandran Ashwin
இந்த நிலையில், தான் ரோகித் சர்மாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அண் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் அது வரலாற்று சாதனையாக அமையும்.
Indian Cricket Team
இன்று நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
Ravichandran Ashwin
மேலும், அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் மட்டுமின்றி உலகளவில் 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்திய மண்ணில் கூட ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைக்காத போது வெளிநாட்டு மண்ணில் எப்படி அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தளவிற்கு அஸ்வின் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலு கூட பிளேயிங் 11ல் இடம் அளிக்கப்படுவதில்லை.
Ashwin
இதுவரையில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 489 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதோடு, பேட்டிங்கில் 5 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 3129 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், இன்று நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம் பெற்று 11 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.