- Home
- Sports
- Sports Cricket
- GT vs MI போட்டி மழையால் ரத்தானால் தகுதி சுற்றுக்கு எந்த அணி செல்லும்? முழு அலசல்!
GT vs MI போட்டி மழையால் ரத்தானால் தகுதி சுற்றுக்கு எந்த அணி செல்லும்? முழு அலசல்!
குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் எலிமினேட்டர் போட்டியில் இன்று மோதுகின்றன. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் எந்த அணி தகுதி சுற்றுக்கு செல்லும்? என்பது குறித்து பார்க்கலாம்.

Gujarat Titans-Mumbai Indians Eliminator Match
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்று விட்டது. மற்ற 3 அணிகளான மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கான ரேஸில் உள்ளன.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் எலிமினேட்டர் போட்டியில் பஞ்சாப் முல்லன்பூரின் மகாராஜா யதவீந்திர சிங் ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். அதே வேளையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறி விட வேண்டியது தான்.
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யார் தகுதிச் சுற்று போட்டிக்கு செல்வார்கள்? மும்பை இந்தியன்ஸ் அணியா? இல்லை குஜராத் டைட்டன்ஸா? என்ற கேள்வி உங்களுக்க எழலாம்.
போட்டி மழையால் ரத்தானால் யாருக்கு வாய்ப்பு?
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் (18 புள்ளிகள்) தகுதிச் சுற்று போட்டியில் விளையாட செல்லும். புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள மும்பை (16 புள்ளிகள்) வெளியேறி விடும்.
ஏனெனில் எலிமினேட்டருக்கான ரிசர்வ் நாள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இதனால் மழையால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டால் குஜராத்துக்கு தான் அதிக வாய்ப்பு.
மழை பெய்ய வாய்ப்புள்ளதா?
ஆனாலும் மும்பை ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் போட்டி நடக்கும் முல்லன்பூரில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லை. அங்கு 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மழைக்கான வாய்ப்பு ஏதும் இல்லை.
போட்டி நடக்கும் மகாராஜா யாதவிந்திர சிங் ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனல் பிட்ச் எப்படி இருக்கும்? என்பதை கணிக்க இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும்.
பாஸ்ட் பவுலர்களின் ஆதிக்கம் இருக்கும்
முல்லன்பூரில் நடந்த சமீபத்திய போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஜஸ்பிரித் பும்ரா, டிரண்ட் போல்ட், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய பாஸ்ட் பவுலர்கள் இன்றைய போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய GT vs MI எலிமினேட்டர் போட்டியை வெல்லும் அணி, ஜூன் 1, 2025 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் குவாலிஃபையர் 2 இல் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளும்.