- Home
- Sports
- Sports Cricket
- தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்: இந்தியா நம்பர் 1 என்பதற்கு மன்னிப்பு கேட்ட ஐசிசி!
தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்: இந்தியா நம்பர் 1 என்பதற்கு மன்னிப்பு கேட்ட ஐசிசி!
ஐசிசி டெஸ்ட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா நம்பர் 1 அணியாக தேர்வு செய்யப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி - இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணி
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்ட இந்த தொடர் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி - இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 400 ரன்கள் எடுத்து, 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஐசிசி - இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணி
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மீண்டும் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், அந்த அணி ரவிச்சந்திரன் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. இறுதியாக 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி - இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணி
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசிசி டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்று ஐசிசி அறிவித்தது. இதன் காரணமாக, இந்தியா டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 அணியாக திகழ்கிறது. மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது என்று செய்திகள் வெளியிடப்பட்டது.
ஐசிசி - இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணி
இந்த நிலையில், இந்தியா நம்பர் 1 என்று வெளியானதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐசிசி இணையதளத்தில் இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக தவறாக கட்டப்பட்டது. இதற்கு ஐசிசி மன்னிப்பு கோருகிறது என்று தெரிவித்துள்ளது.