IPL 2023: சொந்த மண்ணில் குஜராத் கிங்: ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா ராணா படை; உத்தேச ஆடும் 11!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 13 ஆவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த 16ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மட்டுமே இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மாறாக குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று நடக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்து வீச்சில் முகமது ஷமி, அல்ஜாரி ஜோசஃப், ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதே போன்று, பேட்டிங்கில் சகா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், விஜய் சங்கர் என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆனால், கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் குர்பாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் சொதப்பி வரும் நிலையில், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதே போன்று பந்து வீச்சைப் பொறுத்த வரையில், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இவர்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது 3ஆவது போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கேகேஆர் அணியில் இடம் பெற்ற ஜேசான் ராய் இந்தப் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று மந்தீப் சிங்கிற்குப் பதிலாக ஜெகதீசன் களமிறங்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச ஆடும் 11:
சுப்மன் கில், விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், அல்சாரி ஜோசஃப், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யாஷ் தயாள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச ஆடும் 11:
வெங்கடேஷ் ஐயர் அல்லது ஜேசன் ராய், ரஹமானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங் அல்லது ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரூ ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.