MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணி இதுதான்! க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு!

Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணி இதுதான்! க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு!

Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை இந்த அணி தான் வெல்லும் என க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 29 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பு
Image Credit : stockPhoto

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பு

ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளும். ஃபைனலுக்கு நுழையும் அணி எது, கோப்பையை வெல்லும் அணி எது என்பது குறித்து பலர் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் க்ரோக் AI ஒரு அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆர்சிபி தான் கோப்பை வெல்லும்
Image Credit : ANI

ஆர்சிபி தான் கோப்பை வெல்லும்

அதாவது எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் க்ரோக் AI-யிடம் ஒரு கேள்வி கேட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய மூன்று அணிகளில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியின் புகைப்படத்தை நீக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு க்ரோக் AI, ஆர்சிபி புகைப்படத்தை நீக்கி, 'இந்த முறை ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும்' என காரணத்துடன் பதிலளித்துள்ளது.

'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும். அந்த அணியின் பலம், அனுபவம், மற்றும் எனர்ஜி அபாரமானது. ராஜஸ்தான், குஜராத் அணிகள் ஆபத்தானவை என்றாலும், இந்த முறை ஆர்சிபி-யுடன் போட்டிபோட முடியாது. ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும்' என க்ரோக் AI கூறியுள்ளது.

Related Articles

Related image1
RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
Related image2
RCB vs GT: குஜராத்தை கதறவிட்ட ஆர்சிபி! தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் கெத்தாக என்ட்ரி!
34
பலம்வாய்ந்த ஆர்சிபி அணி
Image Credit : ANI

பலம்வாய்ந்த ஆர்சிபி அணி

இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே ஆர்சிபி அணி, வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அணி மிகவும் பேலன்ஸாக உள்ளதுடன், ஒவ்வொரு வீரரும் பங்களிக்கின்றனர். அணி ஒரு வீரரை மட்டுமே நம்பி இல்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2-வது குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன.

இரண்டுமே பலமான அணிகள். ஒருபுறம் கில், பட்லர், சாய் சுதர்ஷன் என்றால், மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் என அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால், இன்று மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறும். மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்சிபி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே அகமதாபாத் பயணத்தை தொடங்கிவிட்டனர்.

44
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எக்ஸ் (X) தளத்தின் 'க்ரோக் AI' (Grok AI) வெளியிட்ட கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தகவல் பகிர்வுக்கான செய்தி மட்டுமே. AI கணிப்புகள் அனைத்தும் கடந்த கால தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவை 100% துல்லியமானவை என்று கூற முடியாது. கிரிக்கெட் என்பது கடைசி பந்து வரை திருப்பங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு என்பதால், போட்டியின் உண்மையான முடிவு களத்தில் வீரர்களின் அன்றைய ஆட்டத்திறனை பொறுத்தே அமையும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Related Stories
Recommended image1
RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
Recommended image2
RCB vs GT: குஜராத்தை கதறவிட்ட ஆர்சிபி! தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் கெத்தாக என்ட்ரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved