Irfan Pathan and KL Rahul: 2023 ஆம் ஆண்டு கேஎல் ராகுலுக்கு தான் சிறந்த ஆண்டு – இர்பான் பதான்!
கேஎல் ராகுலுக்கு தான் 2023 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
2023 Best Year KL Rahul
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றி பெற்றுக் கொண்டே இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
KL Rahul
இதன் மூலமாக இந்த ஆண்டு இந்திய அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று ஒட்டு மொத்த உலக ரசிகர்கள் அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியை கொடுத்தது.
KL Rahul 2023 is Best year
இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தனது 50ஆவது சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். ரோகித் சர்மா சிக்ஸர் மன்னனான மகுடம் சூடினார். அவரது கேப்டன்ஷியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்தது.
KL Rahul
இந்த ஆண்டில் சுப்மன் கில் 7 சதங்கள் அடித்திருந்தார். விராட், ரோகித், கில் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இந்த ஆண்டின் சிறந்த வீரராக கேஎல் ராகுலை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் மகுடம் சூடியுள்ளார்.
india kl Rahul
நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெங்களூரு தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு தனது தகுதியை நிரூபித்து உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார்.
2023 is Best for KL Rahul
இதில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
KL Rahul
இந்த தொடரில் அவர் விளையாடிய 10 போட்டிகளில் மொத்தமாக 452 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிக்கு தொடருக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது.
KL Rahul
இதன் மூலமாக விராட் கோலிக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற 2ஆவது கேப்டன் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் கேஎல் ராகுல் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 1060 ரன்கள் குவித்துள்ளார். இதில், 2 சதமும், 7 அரைசதமும் அடங்கும்.
KL Rahul
இதன் காரணமாக மற்ற வீரர்களை விட 2023 ஆம் ஆண்டு கேஎல் ராகுலுக்கு தான் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.