- Home
- Sports
- Sports Cricket
- ICC New Rules: வீரர்களுக்கு மட்டும் தான் ரூல்ஸா? நடுவர்களுக்கு இல்லையா? ஐசிசியை விமர்சிக்கும் ரசிகர்கள்!
ICC New Rules: வீரர்களுக்கு மட்டும் தான் ரூல்ஸா? நடுவர்களுக்கு இல்லையா? ஐசிசியை விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஐசிசி பல்வேறு விதிகளை கொண்டு வந்த நிலையில், அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீரர்களை பள்ளி குழந்தைகளை போல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Fans Opposed ICC New Rules
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் தொடக்கத்திலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதே நேரத்தில், வெள்ளை பந்து வடிவம் தொடர்பான விதிகள் ஜூலை 2 முதல் நடைமுறைக்கு வரும். இப்போது அந்த 8 விதிகள் என்னென்ன? என்று பார்க்கலாம்.
1.டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாப் க்ளாக் விதி
வெள்ளை பந்து வடிவத்திற்குப் பிறகு, ஐ.சி.சி இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்டாப் கடிகாரத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் இப்போது பீல்டிங் அணி முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும்.
60 வினாடிகளை தாண்டியும் அடுத்த ஓவரை தொடங்கவில்லை என்றால் நடுவர்கள் முதலில் இரண்டு எச்சரிக்கைகளை வழங்குவார்கள். இதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்படும். 81வது ஓவரிலிருந்து 160வது ஓவர் வரை இந்த எச்சரிக்கை மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.
2. ஒருநாள் போட்டிகளில் 35 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும்
தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரு அணி இரண்டு பந்துகளைப் பயன்படுத்தி 25-25 ஓவர்கள் வீச வேண்டியிருந்தது. ஆனால் ஜூலை 2 முதல், ஒருநாள் போட்டிகளில் 35 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பந்தை மட்டுமே பயன்படுத்த அணி அனுமதிக்கப்படும்.
3. பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தினால் 5 ரன் அபராதம்
பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்துவது தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல் உமிழ்நீரை பயன்படுத்தினால் பந்தை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த பந்து மோசமாகி இருந்தால் அதை மாற்ற வேண்டுமா இல்லையா என்பதை நடுவர் முழுமையாக முடிவு செய்வார். உமிழ்நீர் பயன்படுத்தி பந்தை முழுமையாக சேதப்படுத்தினால் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
4. நோ பாலிலும் கேட்ச் சரிபார்க்கப்படும்
இதுவரை நோ பால் கொடுக்கப்படும்போது வீரர்களால் பிடிக்கப்படும் கேட்ச் சரியானதா இல்லையா என்று சரிபார்க்கப்படவில்லை. ஆனால் இப்போது நோ பாலுக்கு பிறகும் கேட்ச் சரிபார்க்கப்படும். கேட்ச் சரியாக இருந்தால், பேட்டிங் அணிக்கு ஒரு ரன் மட்டுமே கிடைக்கும். மறுபுறம், கேட்ச் சரியாக இல்லாவிட்டால், அந்த பந்தில் அவர்கள் எடுக்கும் அனைத்து ரன்களும் கணக்கிடப்படும்.
5. கிரீஸில் பேட் வைக்கவில்லை என்றால் 5 ரன்கள் அபராதம்
ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றே கிரீஸுக்குள் பேட்டை வைக்காமல் குறுகிய ரன் எடுத்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கழிக்கப்படும். மேலும் அந்த நேரத்தில் எந்த பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எடுப்பார் என்பதை பீல்டிங் அணி மற்றும் நடுவர்கள் முடிவு செய்வார்கள்.
6. டிஆர்எஸ் விதிகளில் மாற்றம்
ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டுக்கும் ரிவியூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.
7. இனி பவுண்டரி லைனில் இஷ்டப்படி கேட்ச் செய்ய முடியாது
புதிய விதியின்படி, இப்போது எந்த ஃபீல்டரும் பவுண்டரி லைனை மிதிக்காமல் எல்லைக்கு வெளியே சென்று பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும். ஒரு ஃபீல்டர் பவுண்டரி லைனில் துள்ளிக்குதித்து பந்தை எல்லைக்குள் தள்ளினால், உள்ளே வந்து கேட்ச் பிடித்தால் மட்டுமே அது சட்டப்பூர்வமாகக் கருதப்படும்.
8. கேட்ச் ரிவியூவிலும் எல்பிடபிள்யூ பரிசோதிக்கப்படும்
இதுவரை கீப்பர் பந்தை கேட்ச் செய்ததை எதிர்த்து ஒரு பேட்ஸ்மேன் அப்பீல் செய்யும்போது பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பதை 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பம் மூலம் கண்டறிவார்கள். பந்து பேட்டில் படாமல் காலுறையில் மட்டுமே உரசி இருப்பது தெரியவந்தால் நடுவர் தீர்ப்பை மாற்றி நாட்-அவுட் வழங்கி வந்தார்.
ஆனால் இனி வரும் காலங்களில் பந்து காலுறையில் உரசியதால் அது எல்பிடபிள்யூக்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை 3வது நடுவர் சரிபார்ப்பார்.
ஐசிசி விதிகளுக்கு எதிர்ப்பு
ஐசிசியின் புதிய விதிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டாப் க்ளாக் விதி கொண்டு வரப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அனைத்து ஃபார்மெட்டுகளிலும் மெதுவான ஓவர் விகிதங்களுக்கு வீரர்கள் தொடர்ந்து கண்டிக்கப்படுவது வெறுக்கத்தக்கது, அதே நேரத்தில் நடுவர்கள் ஒவ்வொரு முடிவுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், தொழில்நுட்பம் அதிக சுமை எடுக்க மணிநேரம் எடுக்கும், மேலும் களத்தில் உள்ள நடுவர்கள் மூன்றாவது நடுவரை கையளிப்பதற்கான சமிக்ஞையை கூட எடுக்கிறார்கள்.
நடுவர்கள் மோசமான தீர்ப்பு வழங்கினாலும் கவலையில்லை
நடுவர்கள் முட்டாள்களாக இருக்கலாம், நேரத்தை வீணடிக்கலாம். மோசமான முடிவுகளை எடுக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஆனால் ஒரு வீரர் ஒரு வார்த்தை கூட சொன்னாலும், அவர் கண்டிக்கப்படுகிறார். அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களை பள்ளிக் குழந்தைகளைப் போலவே தொடர்ந்து நடத்துகிறார்கள். இப்படி ரூல்சை கொண்டு வந்து விட்டு அதிக நாடுகளில் மக்கள் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று ஐசிசி புலம்புகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

