- Home
- Sports
- Sports Cricket
- ENG vs IND 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்..! ரிஷப், தினேஷ் கார்த்திக் 2 பேருக்குமே இடம்
ENG vs IND 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்..! ரிஷப், தினேஷ் கார்த்திக் 2 பேருக்குமே இடம்
இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டி20 போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் கண்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அணிக்குள் நுழைந்ததால் இளம் வீரர்கள் அணியில் இடத்தை இழந்தனர். கோலி அணிக்குள் வந்ததால் தீபக் ஹூடா நீக்கப்பட்டார். ஜடேஜா மற்றும் பும்ரா அணிக்கு திரும்பியதால் அக்ஸர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டனர்.
ரிஷப் பண்ட் அணிக்குள் வருவதால் தினேஷ் கார்த்திக் - இஷான் கிஷன் ஆகிய இருவரில் யார் நீக்கப்படுவார் என்ற கேள்வி இருந்தது. தினேஷ் கார்த்திக் இப்போதைக்கு செம ஃபார்மில் ஆடிக்கொண்டிருப்பதால் அவரை நீக்க முடியாது. எனவே இஷான் கிஷனை நீக்கப்பட்டுள்ளார். ரோஹித்துடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கப்பட்டார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரிச்சர்ட் க்ளீசன், மேத்யூ பார்கின்சன்.