- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 2nd Test: இந்திய அணியில் சாய் சுதர்சன் நீக்கம்! பும்ராவும் இல்லை! பிளேயிங் லெவன் இதோ!
IND vs ENG 2nd Test: இந்திய அணியில் சாய் சுதர்சன் நீக்கம்! பும்ராவும் இல்லை! பிளேயிங் லெவன் இதோ!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை.

IND vs ENG 2nd Test: England Bowling First Sai Sudarshan Out
இந்தியா, இங்கிலாந்தும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூலை 2) தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார்.
இந்திய அணி முதலில் பேட்டிங்
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது வானம் மேகமூட்டமாக இருப்பதால் முதல் இரண்டு நாட்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் எந்தவித தயக்கமுமின்றி பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஏற்கெனவே எதிர்பார்த்தபடி இந்தியாவின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சாய் சுதர்சன் நீக்கம்
பும்ராவுக்கு பதிலாக பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார். அதே வேளையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சனுக்கு காயமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
நிதிஷ் குமார் ரெட்டிக்கு அணியில் இடம்
இதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சொதப்பிய ஷர்துல் தாக்கூர் நீக்கபப்ட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பிடித்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை.
ஆனால் வலது கை ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவம்வாய்ந்த ஜஸ்பிரித் பும்ரா விளையாடாத நிலையில், முகமது சிராஜ் தலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறை களமிறங்குகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை 2 நாட்களுக்கு முன்பே பிளேயிங் லெவனை அறிவித்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் அப்படியே 2வது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்குகின்றனர். அந்த அணியின் பாஸ்ட் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தகவல் பரவிய நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பொறுமை அவசியம்
2வது டெஸ்ட் போட்டி நடக்கும் எட்ஜ்பாஸ்டன் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் ஒத்துழைக்கும். இந்த பிட்ச் முதல் இரண்டு நாட்களில் கூடுதல் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் உடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆகையால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுமையுடன் விளையாட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக புதிய பந்தில் முதல் 2 மணி நேரம் சமாளித்து விட்டால் அதன்பிறகு பொறுமையாக ரன்கள் சேர்க்கலாம்.
இந்தியா, இங்கிலாந்து பிளேயிங் லெவன்
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ்.
2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாக் க்ரொலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் ஷோயப் பஷீர்.