- Home
- Sports
- Sports Cricket
- 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டிஸ்னி+ஹாட்ஸ்டார்: கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரோலாகும் HotStar!
2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டிஸ்னி+ஹாட்ஸ்டார்: கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரோலாகும் HotStar!
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் சர்வர் பிரச்சனையால் செயலிழந்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 263 ரன்கள் குவித்தது.
இதில், உஸ்மான் கவாஜா 81 ரன் சேர்த்து ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கோப் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியைப் பொறுவத்த வரையில் பந்து வீச்சில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் செயலிழந்துவிட்டது.
ஆம், சர்வர் பிரச்சனை காரணமாக அந்த நிறுவனம் தற்போது செயலிழந்து காணப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், போட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது.
Image credit: Getty
இந்த நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் சர்வர் பிரச்சனை காரணமாக முடங்கிய நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியை காண முடியாத ரசிகர்கள் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Image credit: Getty
இவ்வளவு ஏன் இந்திய கிரிக்கெட்டர் அபினவ் முகுந்த் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் இது எனக்கு மட்டும் தானா அல்லது ஹாட்ஸ்டார் ஆப் டவுனாகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பியதோடு தொடர்ந்து எர்ரர் காண்பித்து வருகிறது, யாராவது சரி செய்தார்களா என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/mukundabhinav/status/1626483636076945409?s=20
Image credit: PTI
இதே போன்று மற்றொரு ரசிகர் கூட, ஆஸ்திரேலியா நன்றாக விளையாடி வரும் நிலையில், ஹாட்ஸ்டார் தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது என்றும், ஹாட்ஸ்டார் பயன்பாட்டிற்கு சென்றால் PB-4000 பிழை என்றும் NM-4000 என்றும் காட்டுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Image credit: PTI
இதுவரையில் சரியாகாத நிலையில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் இருக்கிறது. இன்றைய முதல் நாள் போட்டி முடிந்த நிலையில், நாளை 2ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருக்கிறது. அதற்குள்ளாக இந்த ஆன்லைன் ஸ்டிரீமிங் நிறுவனம் தனது பிழையை சர்வர் பிரச்சனையை சரி செய்துவிடுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.