RCB அணியை விற்க டியாஜியோ முடிவு! அட! புதிய 'ஓனர்' இவரா? முழு விவரம்!
RCB அணியை விற்க டியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Diageo Decided to Sell RCB
பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் தனது பங்குகளில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ விற்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத்தில் நடந்த 18வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியது.
சோகத்தில் முடிந்த ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டம்
இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியே கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விராட் கோலியையும் கைது செய்ய வேண்டும் என ஒருசிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆர்சிபி அணியின் மதிப்பு என்ன?
பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ, அதன் இந்திய துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் மூலம், ஆர்சிபியின் உரிமையைப் பெற்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆர்சிபி அணியின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 16,700 கோடி) இருக்கும் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற பிறகு ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆர்சிபி அணியை டியாஜியோ விற்க இதுதான் காரணம்
ஆனாலும் ஐபிஎல்லில் மது மற்றும் புகையிலை பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது ஆர்சிபி அணியை விற்க டியாஜியோவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும் அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் பிரீமியம் மது விற்பனையில் ஏற்பட்ட சரிவு, அந்த நிறுவனத்தை அதன் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்தத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
லாபம் ஈட்டிக் கொடுத்த ஆர்சிபி
2008 ஆம் ஆண்டில், தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூலம் ஆர்சிபி அணியை 111.6 மில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்பு மல்லையாவின் வணிக சாம்ராஜ்யம் சரிந்த பிறகு, டியாஜியோ யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி RCB-யின் உரிமையைப் பெற்றது.
இப்போது, அணியின் சமீபத்திய வெற்றியுடன், டியாஜியோ இந்த ஒப்பந்தத்திலிருந்து கணிசமான லாபம் ஈட்ட விரும்புகிறது. இந்தச் செய்தி வெளியானதும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் 3.3% உயர்ந்து, ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.
டியாஜியோ இறுதி முடிவு என்ன?
இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் டியாஜியோ ஆர்சிபி உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடன் பிரச்சனை காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிய மதுபான அதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய நேர்காணல், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேர்காணலில் இந்தியாவில் தனது கடன் ரூ.6203 கோடி என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.
மீண்டும் விஜய் மல்லையா கையில் ஆர்சிபி?
இருப்பினும், மல்லையாவின் கடன் ரூ.9 ஆயிரம் கோடி என்று அரசாங்கம் கூறியுள்ளது. விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, மல்லையாவின் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது. இவை அனைத்தையும் மீறி, விஜய் மல்லையாவுக்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களும் செல்வமும் உள்ளன.
எனவே, டியாஜியோ ஆர்சிபியை விற்க முடிவு செய்தால், விஜய் மல்லையா ஆர்சிபியை மீண்டும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.