டெல்லி கேபிடல்ஸூக்கு தாவும் ரோகித் சர்மா? ரெடியா இருக்கும் கங்குலி!
கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டிரேட் முறையில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mumbai Indians
முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் துபாயில் நடந்தது. ஏலம் முடிந்ததும் ஒவ்வொருவரது கவனமும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா மீது திரும்பியுள்ளது. ஐபிஎல் டிரேட் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் வாங்கப்பட்டார்.
Rohit Sharma
அதன் பிறகு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இது, ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து 5 முறை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு விமர்சனம் எழுந்தது. அதோடு, ஹர்திக் பாண்டியாவிற்கு இன்னும் காயம் குணமடையாத நிலையில், அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்று தகவல் வெளியானது.
MI Rohit Sharma
இந்த நிலையில், தான் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரேட் முறையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை மாற்ற பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இது தொடர்பாக டெல்லி கேபிடன்ஸ் அணியின் இயக்குநரான சவுரவ் கங்குகுலி, ரோகித் சர்மாவை டிரேட் முறையில் எடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Mumbai Indians
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மா இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் உரிமையை பிரபலமாக்கினார். எங்கள் அணியில் ரோகித் சர்மாவை வர்த்தகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஆகையால் ரோகித் சர்மா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சென்றால், மீண்டும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார். ஆனால் அது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும்.
Rohit Sharma IPL
ஏற்கனவே ரிஷப் பண்ட் விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசன்களில் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக இருந்தார். இப்போது ரோகித் சர்மா டெல்லிக்கு வந்தால், அவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட அதிக சாத்தியக் கூறுகள் இருக்கிறது. மேலும், டெல்லியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கலாம். ஆனால், அவர் டெல்லிக்கு வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.