திலக் வர்மா, பாண்டியா அதிரடி – கடைசி வரை போராடிய MI 10 ரன்னில் தோல்வி: டெல்லிக்கு 5ஆவது வெற்றி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 44ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 43ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடிய ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், அவர் 27 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
இதே போன்று அபிஷேக் போரெல் 36 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஷாய் ஹோப் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இதில், ஷாய் ஹோப் 41 ரன்கள் சேர்க்க, பண்ட் 29 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்ஷர் படேல் காம்போ கடைசியில் அதிரடி காட்ட, டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 68 ரன்கள் கொடுத்தார். நுவான் துஷாரா 56 ரன்கள் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தார். பும்ரா, சாவ்லா மற்றும் நபி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே திணறி வந்த ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த இஷான் கிஷான் 14 ரன்களில் வெளியேறினார்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் கூட்டணி சேர்ந்து விளையாடினர். இதில், சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் 26 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். மும்பை இந்தியன்ஸ் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிய நிலையில், 46 ரன்களில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த நேஹல் வதேரா 4 ரன்னில் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தது. டிம் டேவிட் களமிறங்கி சரவெடியாக சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
கடைசியில் டிம் டேவிட்டும் 37 ரன்னில் வெளியேறினார். முகமது நபி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடித்து விளையாட வேண்டிய நிலையில், 19ஆவது ஓவரில், 2 சிக்ஸர் உள்பட 16 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியில் 20ஆவது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. இதில், முதல் பந்திலேயே திலக் வர்மா 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ரன் அவுட்டானார். அவர், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்தார்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
இறுதியில் பியூஷ் சாவ்லா 10 ரன்னும், லூக் உட் 9 ரன்னும் எடுக்கவே மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. 5ஆவது இடத்திலிருந்த சென்னை 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.